Pages

"தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" (TRANQUBAR DANISH PORT)




இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" உள்ளது.  இந்தியாவின் வரலாற்று சிறப்பு மீக்க ஒன்று ஆகும்
                 குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன்இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி.1306ல் இவ்வூருக்கு  தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான்வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு மூலமாக   இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி"சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான்சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான்கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும்தோற்றுவித்தவன் "குலசேகரபாண்டியன்" என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்றுகி.பி.1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தனஅதன் பின்னர் தஞ்சையிலிருந்து கி.பி.1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும் (கடற்கரையோரம் அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயில்சுவாமி பெயர் "மாசிலாமணீஸ்வரர்" என்று மாறியுள்ளது.
                கி.பி.1618ம் ஆண்டு டென்மார்க்கு அரசர் கிறிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பிவைதார். ("ஒவ்கிட்என்பவர் டென்மார்க் அரசின் கடற்படைத் தளபதி)  அதன் பின்னர் தஞ்சைக்கும் டென்மார்க்கும் வணிக ஒப்பந்தம் கி.பி.1620ல் ஏற்பட்டதுபின்னர் ஆங்கிலேயர்களால் சடங்கன்பாடி என்ற பெயர்களை சரியாக உச்சரிக்க வராமற் போகவே"தரங்கம்பாடி" என்று பெயர் மாறி (தரங்கம் - அலைஅலைகள் சூழ்ந்த நகரம் - தரங்கம்பாடி) என்றானதுகி.பி.1620ல் தஞ்சவூர் "மன்னர் ரகுநாத நாயக்கர்காலத்தில் ஒவ்கிட் ஆல் கட்டபட்டது தான் "டேனிஷ் கோட்டை", கி.பி.17 ஆம் நூற்றாண்டில் ஒரு முக்கீய வணிக தலமாக அமைந்தால் "டேனிஸ் போர்ட்" என்று பெயர் பெற்றதுதரங்கம்பாடி (டேனிஷ்கோட்டை  மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளனசெங்கல்லாலான இந்தக் கட்டிடத்தை இந்திய கொத்தனார்கள் தான் கட்டினார்கள்இவர்கள் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்ந்ர்1624ல் இக்கோட்டை டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது.  . 
                 1682ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் "பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு". இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில்கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார்தரங்கம்பாடி (டேனிஷ்கோட்டை வர ஆசைப்பட்ட அவரை டென்மார்க் அரசர் கப்பலில் அனுப்பி வைத்தார்.1706ம் ஆண்டு ஜுலை 9ந் தேதி தரங்கம்பாடி மண்ணில் கால் பதித்தார்இவர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி கொண்டு வர ஏற்பாடு செய்தார்"பொறையாறு" அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவிமரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார்இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தான் 'புதிய ஏற்பாடு'1715ல் அச்சடிக்கபட்டதுசீகன் பால் முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது சிறப்பு அம்சமாகும்1719ம் ஆண்டு தரங்கம்பாடியிலே சீகன்பால் மறைந்தார்
                 டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியர் இவர்களுடைய தேவைக்கேற்ப,1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைத்தனர்பின்னர் 1845ல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு "12 அரை" இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர். 1977ம் ஆண்டு  முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பண்டைய கால சின்னமாக இக்கோட்டை பாதுகாத்து வருகிறது. 

Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to ""தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" (TRANQUBAR DANISH PORT)"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets