Pages

மாபெரும் விஞ்ஞானி கலிலியோ






மாபெரும் விஞ்ஞானி கலிலியோ--- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய் யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை. அவர்க ளது கண்டுபிடிப்புகள் மதநம் பிக்கைகளுக்கு விரோதமான தாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளி யிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப் படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ கலிலி தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண் டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

17 வயதிலேயே...கலிலியோ 1564-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பைசா நகரத் தில் பிறந்தார். 17 வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் சர்ச்சில் தொங்கவிடப்பட்டிந்த ஒரு விளக்கு காற்றில் ஆடுவதைக் கவனித்தார். அதன் அலைவீச்சு (ளறiபே) சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அது ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல ஒரே அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவருக் குத் தோன்றியது. அதை எப்படி சரிபார்ப்பது? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று தெரி யாமலா சொன்னார்கள்? தனது நாடித்துடிப்பை வைத்தே தனது ஊகம் சரிதான் என்று கண்டு பிடித்தார். இப்ப டித் தான் அவர் ஊசலின் (ளiஅயீடந யீநனேரடரஅ) விதிகளைக் கண்டுபிடித்தார்.
25 வயதில் பைசா பல் கலைக் கழகத்தில் அவர் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார். பண்டிதர்களின் மொழியான லத் தீனில் போதிப்பதற்குப் பதில் பாமர மொழியான இத்தாலி மொழியில் கற்பித்தார். 2000 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்துவந்த அரிஸ்டாட்டிலின் சில கருத்துக்களை கலிலியோ கேள்வி கேட்கத் தொடங்கினார். உதாரணமாக, இரண்டு பொருட் களை ஒரே நேரத்தில் கீழே விட்டால் கனமான பொருள்தான் தரை யை முதலில் வந்தடையும் என்பது அரிஸ்டாட்டிலின் ‘தத்துவம்.’ இதைத் தவறு என ஒரு சிறு பரிசோதனை மூலம் கலிலியோ நிரூபித்தார் (இது பற்றி அறிவியல் கதிரில் முன்னரே எழுதியிருக் கிறேன்). தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் கலிலியோ தான். ‘சந்திரன் மிருதுவான உருண்டை வடிவப் பந்து’ என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. “சந்திரனின் மேற்பரப்பு கரடுமுரடானது, மலைகளும் பள்ளத் தாக்குகளும் நிறைந்தது” என்று தொலை நோக்கி மூலம் கண்ட றிந்து சொன்னார் கலிலியோ. முதன்முதலில் தொலைநோக்கி மூலம் பால்மண்டலத்திலுள்ள பல புதிய நட்சத் திரங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டவரும் அவரே ; மற்றவர்களை ஆச்சரியப்படுத்திய வரும் அவரே.
பிரபஞ்சத்தின் மையம் பூமியா, சூரியனா..?
“பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத் திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவி யலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன் றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. கலிலியோ கோபர்னிக் கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். ஆனால் கலிலியோ வின் இந்த `அதிகப் பிரசங்கித்தனங்களை’ சக விஞ்ஞானிகளே கூட ஏற்க மறுத்தனர்.
கோபர்னிக்கஸின் கருத்துக்களை ஆதரித்து கலிலியோ எழுதிய ‘னுயைடடிபரந’ என்ற புத்தகம் மிகப் பிரபலமா னது. பைபிளில் கூறப்பட்ட தற்கு மாறாக கலிலியோ வின் கருத்துக்கள் இருந் ததால் போப் முன் ஆஜ ராகி விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந் தது. கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. அவரது வயோதிக காலத்தில் ‘சர்ச்சைகளில் சிக்காத’ இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர் அனுமதிக்கப்பட்டார் ! 1638-இல் இரு கண்களும் தெரியாமல் போய்விட்டது. அந்த நிலைமையிலும் பெண்டுலத்தைப் பயன் படுத்தி கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் கலிலியோ. 1642-இல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்

-- நன்றி-- பேரா. கே.ராஜு
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "மாபெரும் விஞ்ஞானி கலிலியோ"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets