
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் "தரங்கம்பாடிடேனிஷ் கோட்டை" உள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மீக்க ஒன்று ஆகும். குல சேகர பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். இவன் தன் 38வது ஆட்சியாண்டில் கி.பி.1306ல் இவ்வூருக்கு தோற்றுவித்துக் கோயிலையும் கட்டினான். வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு மூலமாக இறைவனே யாதலின் இவ்வூருக்கு (ஷட் - அங்கன் பாடி) "சடங்கன்பாடி" என்று பெயர் வைத்தான். சுவாமிக்கு மணிவண்ணீசுவரமுடையார் என்று திருநாமஞ் சூட்டினான். கடற்கரையை யொட்டிய நகர மாதலாலும், தோற்றுவித்தவன் "குலசேகரபாண்டியன்" என்பதாலும் இவ்வூருக்குக் குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. கி.பி.1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும் இப்பெயர்களே வழங்கி வந்தன, அதன் பின்னர் தஞ்சையிலிருந்து கி.பி.1567ல் ஆட்சி செய்த அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர் சடங்கண்பாடி என்றிருந்த போதிலும் (கடற்கரையோரம் அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயில்) சுவாமி பெயர் "மாசிலாமணீஸ்வரர்" என்று மாறியுள்ளது. ...