Pages

அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள்



லைபேசி என்பது பேசுவதற்கு மட்டும்தான் என்று எண்ணுபவன் என் நண்பன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அலைபேசியை வைத்து பேசுவது மட்டுமில்லாமல் மற்ற பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் . 

Android என்பது அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்பு. ஜாவாவால் ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கும். இது நோக்கியா தவிர பிற நிறுவன அலைபேசிகளில் உள்ளது. GPRS , 3G , WIFI மூலம் இதனை இணைத்து உபயோகப் படுத்தலாம்.
இதில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாடுகளில் (application) சிலவற்றை இங்கு பார்ப்போம்.

* முன்பின் தெரியாத இடத்திற்கு சென்றால் கூகிள் வரைபடம் மூலமாக நாம் போக வேண்டிய இடத்தை கண்டு பிடிக்கலாம்.
* நண்பர்களை குழுவில் இணைத்துக் கொண்டால் அவர் இருக்குமிடத்தைக் காணலாம். நண்பர் அடையாரில் இருந்து கொண்டு "பத்து நிமிடத்தில் நுங்கம்பாக்கம் வருகிறேன்" என்று பொய் சொன்னால் மாட்டுவது உறுதி. கணவர்களுக்கு இது மிகப் பெரிய தலைவலியை உருவாக்கும். யாராவது கடத்தப்பட்டால் ( அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யாவிட்டால்) கூட கண்டு பிடித்துவிடலாம்.
* காரோடு இணைத்துக் கொண்டால் கவலையே இல்லை. அது இப்போது எங்கு இருக்கிறது, யார் திருடி எங்கே வைத்துள்ளார், சாலையில் நாம் போகும் இடத்தை வழி காட்டிச் செல்லுதல், தரிப்பிடம் குறித்த கால இயக்கி (parking timer ) , தூரம் காட்டி (Distance indicator ) இன்னும் பல . ஆனால் மகிழுந்தில் (கார்) WIFI இணைப்பு இருக்கவேண்டும்.
* அலைபேசி தொலைந்து போகும் என்ற கவலை வேண்டாம். புதிய தகவல் அட்டையை (sim card ) மாட்டும்போது நம் அலைபேசியின் இருப்பிடம் அறிந்து கொள்ளலாம் மற்றும் தானாக பூட்டிக் கொள்ளும் வசதி. மேலும் ஒலி எழுப்பி திருடியவரை பயமுறுத்தலாம். அப்படியும் கிடைக்காவிட்டால் தொலை இயக்கி மூலம் நம் தனிப்பட்ட தகவல்களை அழித்து விடலாம். என்ன கொஞ்சம் செலவாகும் .
* இன்னொரு பயன்பாட்டைப் பயன்படுத்தி நம் அலைபேசியை கொண்டு ஆகாயத்தை நோக்கி நீட்டினால் விண்கலங்கள் எங்கெங்கு சுற்றி கொண்டு இருக்கின்றன என்பது தெரிந்து விடும். மேலும் ஒரு வாரத்திற்கான வானிலை அறிக்கை போன்றவையும் பார்க்கலாம்.

* இரத்த அழுத்தம், நம் உடலின் வெப்ப நிலை , இதயத் துடிப்பு போன்றவற்றையும் சோதித்துக் கொள்ளலாம். மாதிரி உடற்பயிற்சி முறைகளைப் பார்த்து நாமும் அது போல செய்யலாம்.
* பணத்தை திட்டமிடுதல் ( money manager ) , வரவு செலவு விவரம் ( வார மற்றும் மாத ), செலுத்த வேண்டிய பில் விவரங்கள், நேரம் திட்டமிடுதல் ( சமைக்க , உடற்பயிற்சி , சாப்பிடும் மற்றும் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆகும் நேரம் தெரிந்து கொள்ள) , மற்றும் facebook , twitter போன்ற சமூக தளங்களையும் இணைத்து கொள்ளலாம்.

* ATM களை கண்டுபிடிக்கலாம். குறுஞ் செய்தி, புகைப்படங்கள் மற்றும் மின் அஞ்சல்களை பூட்டி கடவுச் சொல் கொண்டு திறக்கும்படியாகச் செய்யலாம். மொழி பெயர்ப்பு வசதியும் உண்டு. (இந்திய மொழிகளில் இன்னும் வந்ததா என்று தெரியவில்லை) .

* குழந்தைகளுக்கு தேவையான மருத்துவக் குறிப்புகள், உணவுக் குறிப்புகள், பெண்கள் தங்கள் மாத விலக்கு தேதியை பதிவு செய்தால் அவர்கள் எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் போன்ற ஆலோசனைகளும் உள்ளது.

* உலகில் உள்ள தமிழ் வானொலிகள், 210000 உணவகங்களின் தொகுப்பு, இசை, சினிமா என்று அனைத்துமே உங்கள் கைகளில். நீங்களே சொந்தமாக tune போட்டு இசையை சேமித்து வைக்கலாம்.

கீழுள்ள இணையத் தளங்களில் போய்ப் பார்த்தால் நான் மேலே கூறியவை வெறும் கடுகளவு என்பதை உணருவீர்கள்.

http://101bestandroidapps.com/
http://www.androidfreeware.net/

பெரும்பாலான அன்ட்ரோயிட் பயன்பாடுகள் ( applications ) இலவசமாகவும் சில தொகை செலுத்திப் பெறக்கூடிய வகையில் உள்ளன .

என்ன அலைபேசி வாங்க கிளம்பிவிட்டீர்களா? Android உள்ள அலைபேசியை பார்த்து வாங்குங்கள். விலை ருபாய் 12 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.
 
[Read More...]


சூரிய கிரகணம்...




கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.

solal_eclipse_351இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு, தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால், தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான 8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே சுற்றி வருகிறது.  சூரியனின் விட்டம் 1384௦௦௦000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 149565139438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை, 3474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா, தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுதான் ஜூன் 1, 2011ல் நிகழ்ந்தது.

நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம், ஜுன் முதல் நாள்தான்.
இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.!
  • 2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
    2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
  • 2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011, டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம்
சீனாவில் கிரகணம் பார்த்தல் 
china_telescope_401கிரகணம் பற்றிய ஆராய்ச்சிகள் கி.பி. 19, 20ம் நூற்றாண்டுகளில்தான் நடைபெற்றன. ஆனால் நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலங்களில் இருந்து கிரகணங்களைப் பார்த்ததிற்கான பதிவுகள் காணப்படுகின்றன. சீன ஜோதிடர்களும், வானவியலாலர்களும், பாபிலோனியர்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முழு சூரிய கிரகணம் பற்றி எழுதி வைத்துள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின் காலத்தைச் சரியாகப் பட்டியலிட இந்த கிரகணம் வந்து போன தேதிகள் உதவுகின்றன. சிரியன்கள் (Syrian ) காலத்து களிமண் பலகை ஒன்றில், கி.மு. 1223, மார்ச் 5ம் நாள் சூரிய கிரகணம் வந்து போன நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு 1036ல் ஜுலை 31ம் நாள் பகல் இரவாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர். 
அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம்.  பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.
ireland_eclipse_347இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது. இந்த சாரோஸ் சுழற்சியில் மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8; முழு கிரகணங்கள்:40; இடைப்பட்டது/ஹைபிரிட்:2; வளைய/கணக்கான கிரகணம்:15 ; அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும். இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும். இந்த முறை எனபது, சந்திரனின் நோடு/சாய்மானம் வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.
நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.
30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!
இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!



                                                                                                                                                            http://www.keetru.com
[Read More...]


இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண





ணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.


Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 


இதில் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இருக்கும் இதில் உங்களுக்கு விரும்பிய மாநிலத்தை கிளிக் செய்தால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் வரும். 


அந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டிய மாவட்டத்தின் லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களை அந்த மாவட்டத்தின் தளத்திற்கு அழைத்து செல்லும். அதில் நீங்கள் அந்த மாவட்டத்தின் அரசாங்க அறிவுப்புகளை பார்த்து கொள்ளலாம். மட்டும் அரசு படிவங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் குறைகளையும் அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.


தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் அரியலூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திற்கும் தனி இணையதளம் உள்ளது.


10 ஆம் வகுப்பிற்குள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் அவர்களுக்கு அறிய தாருங்கள். 












                                                                                         thanks http://www.vandhemadharam.com
[Read More...]


ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி



ந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


 மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது. 

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். 

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம். 


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். 

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள். 

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம். 

முடிந்தவரை அனைத்து தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் கருத்துரையில் கேட்கவும்.



                                                                                                                                         நன்றி -www.vandhemadharam.com
                                                                       
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets