Pages

18 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூட்டர் 2029ல் ஓவர்டேக் செய்யும்!



வாஷிங்டன்: இன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கம்ப்யூட்டர் உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் ‘பியூச்சராலஜி’ (எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன. கம்ப்யூட்டர் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் இதேபோக்கில் வளர்ச்சி அடைந்தால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்கும் ஆராய்ச்சியை அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் பியூச்சராலஜி ஆராய்ச்சியாளர் ரே  கர்ஸ்வெல் மேற்கொண்டார். ஆய்வு முடிவை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
கம்ப்யூட்டர், ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால், கம்ப்யூட்டர் துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கம்ப்யூட்டர்களை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள். இது மெல்ல மெல்ல மாறி, புது கம்ப்யூட்டர் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கம்ப்யூட்டர்களே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு, மனிதனின் உதவி இல்லாமல் கம்ப்யூட்டர்கள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும். அந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கம்ப்யூட்டர் ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029ல் உண்டாகும் என்று தெரிகிறது.
எல்லா ஆராய்ச்சிகளிலும் கம்ப்யூட்டரே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும். இதன்மூலம், சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில், ஒட்டுமொத்த உலகமும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கம்ப்யூட்டர்கள் குறுக்கிடும். அப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கம்ப்யூட்டரின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால், நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும். இவ்வாறு கர்ஸ்வெல் கூறியுள்ளார்.


[Read More...]


23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் : பெண் விஞ்ஞானி அசத்தல் !




துபாய்: ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் வடிவமைப்பதிலும் கில்லாடி.
பிரமாண்ட சொகுசு கார் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சி இவரது தலைமையில் டெல்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஹாலந்து அரசு உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ‘டாவ்’ ரசாயன நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடந்தது. சூப்பர் வாகனத்துக்கான தொழில்நுட்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன வடிவமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 49 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி உயரம் என நீ...ளமான கார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 பேர் உட்காரலாம். இந்த பக்கம் 8, அந்த பக்கம் 8 என மொத்தம் 16 கதவுகள். சூப்பர் பஸ்சின் முன், பின் பக்கங்கள் உலகப்புகழ் பெற்ற லம்போர்கினி கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் மிக மிக சொகுசாக இருப்பதற்கேற்ப அதிநவீன ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அலுமினியம், கார்பன் பைபர், பைபர் கிளாஸ், பாலிகார்பனேட் ஆகியவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் என்பதால் எடை குறைவு. அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் போக முடியும். சூப்பர் பஸ் விலை ரூ.55 கோடி. சூரிய ஒளியில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்பட்டு இந்த கார் இயங்குகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சூப்பர் பஸ்சை முதன்முதலில் வாங்கியிருக்கிறார். ஹாலந்தில் இருந்து ஜம்போ ஜெட் வாகனத்தில் வைத்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்ட சூப்பர் பஸ், அங்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காரை டிசைன் செய்த பெண் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி ஓ
ட்டிக் காட்டினார்.
[Read More...]


3,000 கி.மீ. சென்று தாக்கும் அக்னி : 2பிரைம் நவீன ஏவுகணை நாளை ஒடிசாவில் சோதனை!





புதுடெல்லி: அக்னி 2 பிரைம் நவீன ஏவுகணை நாளை ஒடிசா மாநிலத்தில் சோதனை செய்யப்படுகிறது.
அக்னி என்ற பெயரில் நவீன ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. ஏற்கனவே அக்னி 1, அக்னி 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இப்போது அக்னி 2 பிரைம் என்ற பெயரில் நவீன ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. ஏற்கனவே உள்ள அக்னி 2 ஏவுகணையில் சில நவீன மாற்றங்களுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி 2 பிரைம் ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3,000 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ஒரிசா மாநிலத்தில் உள்ள பலாசோர் ஏவுகணை தளத்தில் இருந்து அக்னி 2பிரைம் ஏவுகணை 15ம் தேதி ஏவப்படும் என்று ராணுவ அமைச்சக அதிகாரிகள் நேற்று டெல்லியில் தெரிவித்தனர். 
இதனிடையே, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நிர்பய் எனப்படும் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. நிர்பய் ஏவுகணை எதிரியின் இலக்கை 1000 கி.மீ. தூரம் சென்று குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோதனை செய்யப்படும் என்று ராணுவ ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
[Read More...]


சீனாவில் தினமும் 10,000 விவாகரத்து?




பெய்ஜிங்: அதிவேக பொருளாதார வளர்ச்சியின் மூலம் உலக நாடுகளை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள சீனாவில் குடும்ப கலாசாரம் குறைந்து வருகிறது. ஆம்... தினமும் 10,000 ஜோடி விவாகரத்து பெறுவதாக  புள்ளி விவரம் கூறுகிறது.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்தம் 28 லட்சம் ஜோடி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளதாக சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 12 சதவீ தம் அதிகம். அதாவது, தினமும் 10 ஆயிரம் ஜோடி விவாகரத்து கோருகின்றனர். சீனாவில் விவாகரத்து பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 7 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. எனினும், பெய் ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முதல்நிலை நகரங்களில் இது 30 சதவீதமாக உள்ளது. 

[Read More...]


அசால்டாக விழுங்கிய நாய்! தம்பதிகள் அதிர்ச்சி








அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் வீட்டில் தபால் உறையால் கவரிடப்பட்ட 1000 டொலர் காணாமல் போய் விட்டது.
Christy,Lawrenson என்ற இந்த தம்பதிகள் யார் இந்தக் காசை எடுத்திருப்பார்கள் என்று பல கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினர்.
ஆனால் அவர்கள் திருடனை விரைவில் கண்டு பிடித்து விட்டார்கள். வீட்டுக்கு வெளியே இருந்து யாரும் வந்து திருடவில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான Tuity நாய் தான் காசு காணாமல் போனதற்கு காரணம்.
நடந்த சம்பவம் இது தான், குறித்த தம்பதியினர் மாதாந்த சம்பளத்தில் 1000 டொலரை சேமிக்கும் வழக்கம் உள்ளவர்கள்.
வங்கியில் வைப்பிலிடுவதற்காக 1000 டொலரை தனியே எடுத்து ஒரு தபால் உறையால் கவரிட்டு வைத்திருந்தனர்.
அவர்கள் மதிய உணவு அருந்தி விட்டு வங்கியில் போடுவதற்காக பணத்தை தேடிய போது அதை எங்கேயும் காணவில்லை.
பின்னர் அறையொன்றின் ஒரு பகுதியில் 100 டொலர் தாள் கிழிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்துள்ளது.
அதன் பின்னர் நாயை மிருக நல வைத்தியரிடம் கொண்டு சென்று வாந்தி எடுக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீதி 900 டொலர்களும் மீட்கப்பட்டன.
டொலர் காணாமல் போனமை ஒருபக்கம் இருக்க தங்களது செல்ல நாய் தான் விழுங்கியது என்ற வியப்பு இன்னும் தங்களை விட்டு நீங்கவில்லை என்கின்றனர் தம்பதியர்.



[Read More...]


விநோதங்கள்






5 அடி உயரமான முன்சக்கரத்தையுடைய விநோத மிதி வண்டி


பொழுதுபோக்கிற்காக 5 அடி உயரமான முன் சக்கரத்தையுடைய மிதி வண்டி ஒன்றைச் சீனாவைச் சேர்ந்த நபரொருவர் உருவாக்கியுள்ளார்.



சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்சன் எனும் ஊரைச் சேர்ந்த சாங் லியான்ஜன் என்பவரே இவ்வாறான வினோத மிதி வண்டியை உருவாக்கியுள்ளார்.
இந்த மிதிவண்டிக்காக இவர் 1,800 ஸ்ரேலிங் பவுண்டுகளை செலவளித்துள்ளார்.
இம்மிதிவண்டியில் பெரிய விளக்கு, வாகன ஒலிபெருக்கி, மற்றும் நான்கு சிறிய சக்கரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவர் டிராக்டர் வண்டியின் 7 அடி உயரமான சக்கரத்தை இதற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அது பாரமாகவும் அதே நேரத்தில் செலுத்துவதற்கு கடினமானதாகவும் இருக்குமென எண்ணி சிறிய முன்சக்கரங்களை கொண்ட மண்வாரியொன்றை உருவாக்குவதற்கு எண்ணினார்.
எப்படியிருப்பினும் சக்கரங்கள் அளவில் வித்தியாசமானவை. அவை மிதி வண்டியை செலுத்துவதற்கு பொருத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
[Read More...]


உணவுகளின் கலோரி கணக்கு







னிதரின் ஒரு நாளைய தேவை
50 ‘ வயது 1500
30-50 வயது 2000
30 வயது 2500
எடையும் கலோரியும்
10000 கலோரி – 1 கிலோ எடை
(எடை குறைக்கவும் எடை ஏறவும் இதை மனதில் கொள்ளுங்கள்)
கலோரி கணக்கு
1கிராம் மாவுச்சத்து – 4 கலோரி
1 கிராம் புரதச்சத்து – 4 கலோரி
1 கிராம் கொழுப்புச் சத்து – 9 கலோரி
சில சமையல் பொருள்களின் கலோரிகள்

1 டீஸ்பூன் எண்ணெய் ( 5 மில்லி) : 45
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் (15 மில்லி : 135
1 ஸ்பூன் நெய், வெண்ணெய் : 90
1 ஸ்பூன் சர்க்கரை : 20
1 டம்ளர் (240 மில்லி) அரிசி : 700
100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் : 100
மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு) : 20-50
பால் 1 டம்ளர் (200 மில்லி) : 140
ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் : 40
முட்டை : 75
மீன் உணவுகள் : 70-100
சிக்கன் (ஆழ்ங்ஹள்ற்) 100 கிராம் : 140
சிக்கன் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200
மட்டன் 100 கிராம் : 300
தேங்காய் (முழு பெரியது) : 400
காலை உணவு பொருட்கள்
இட்லி2 : 80
தோசை (2ஸ்பூன் எண்ணெய்) : 140
காபி : 140
ஆடை நீக்கிய பால் காபி : 80
காபி ஆடை நீக்கிய பால் மாற்று
சர்க்கரை காபி : 40
உப்புமா : 150
பூரி (2) உருளை : 250
பொங்கல் (நெய் இல்லாமல்) : 100
பொங்கல் நெய்யுடன் : 190
2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது : 120
2 சப்பாத்தி எண்ணெயின்றி : 80
1 வடை : 140
ரொட்டி 1 துண்டு : 60
ஜாம் : 30
வெண்ணெய் : 100
ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ் : 100-150
தேங்காய் சட்னி : 30
பரோட்டா 1 : 120
மதிய உணவு பொருட்கள்
ஒரு சாப்பாடு (சைவம்) : 500-600
ஒரு சாப்பாடு நான் (அசைவம்) : 800-1000
தயிர் : 50
100 கிராம் மட்டன் (எண்ணெயில் வறுத்தது) : 400
100 கிராம் மட்டன் (எண்ணெயில் பொறித்தது): 600
100 கிராம் சிக்கன் – மட்டனிலிருந்து 100 கலோரி குறைக்கவும்.
சிறுதீனிகள்
1பிஸ்கெட் : 30
1 க்ரீம் பிஸ்கெட் : 50
10 சிப்ஸ் : 100
எண்ணெயில் வறுத்த பொருட்கள்
30 கிராம் : 100
ஐஸ்க்ரீம் (1 Scoop) : 250 -300
இந்தியன்ஸ்வீட் : 200
கேக்(டீகேக்) : 150
கேக் (Icing கேக்) : 250
ஜுஸ் பானங்கள்
ஜுஸ் சர்க்கரையுடன் : 150
ஜுஸ் சர்க்கரையின்றி : 100
300 மில்லி பானங்கள் : 250
மதுபானங்கள்
பீர் 4% (360 மி) : 120
பீர் 6% Above (360 மி) : 150
ஜின் பக்காடி (60 மி) : 130
விஸ்கி 90 Proof (60மி) : 150
பிராந்தி (60 மி) : 150
பழங்கள், காய்கறிகள்
வாழைப்பழம் 1 பெரியது : 60
மாம்பழம் 1 சிறியது : 100
ஆப்பிள் 1 : 60
நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள் : 40
கடின பழங்கள்,காய்கறிகள் : 60-100
பொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.




மரு. கோ. இராமநாதன்   Author: மரு. கோ. இராமநாதன்
[Read More...]


Missed Batting Average 100. The Story Of Famous Cricketer Donald Bradman




Cricket’s Most Famous Duck [August 14, 1948]: Donald Bradman needed just four runs in his final Test innings to finish with a batting average of exactly a hundred. He walked out to bat at the Oval to one of the loudest receptions in cricket history. England captain Norman Yardley gathered his team around the great man and gave him three cheers.

Facing leg-spinner Eric Hollies, Bradman defended the first ball off his backfoot. The ball stayed low. Next ball, Bradman got forward but was bowled off an inside edge. Some say his sight was affected by the tears from the emotionally-charged occasion. 

Bradman denied this. Saying this belittles the bowler’s effort, he said. Bradman finished with an average of 99.94, and this remains the most famous duck in cricket history.
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets