Pages

எனது 100 ஆவது பதிவு --- நைஜீரியாவின் செயற்கைக்கோள் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது



                  






  
நைஜீரியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1ஆர் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.


 இந்த செயற்கைக்கோள் சீனாவின் ஜிசாங் விண்வெளி தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டது.

 இது இன்னும் 15 ஆண்டுகள் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என "சீனா டெய்லி" எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
 


இந்த செயற்கைக்கோள் நைஜீரியாவின் பாதிப்படைந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1க்குப் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது.

 இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 4 சர்வதேச தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்தி சீனா சாதனை புரிந்துள்ளது.

 இது வரை வர்த்தக ரீதியில் சுமார் 33 சர்வதேச செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
[Read More...]


ஃபுகுஷிமா அணு மின் உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியில் எடுக்க 40 வருடங்கள் தேவை !!!





ப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் அழிவடைந்த அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் 78,400 கோடி ரூபாவும் தேவைப்படும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
 
அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த சவால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் செல்லும். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 

 ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.


இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.


அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவை
யாக இருக்கின்றன.

[Read More...]


துணைக்கோள் இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை




        அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை என தெரிய வந்துள்ளது.

 





மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது அவசியமில்லை என்றும் அதனால் கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது.
 
இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில் பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர்.
 
தற்போது, இந்த ஆராய்ச்சி முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும் என தெரிய வந்துள்ளது.












     
[Read More...]


இந்தியாவின் பழைய நாணயங்கள்









[Read More...]


விண்வெளியில் உயரங்களை துல்லியமாக கணிக்க இயலாத மனித மூளை




ரை படங்களையும் இடங்களையும் பூமியில் சரியாக புரிந்து கொள்ளும் மனிதன், விண்வெளியில் ஓரிடத்தின் லட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் போன்றவற்றை சரியாக புரிந்துகொள்வதில்லையாம். 

இது விண்வெளி வீரர்களுக்கு பிரச்சனை தரும் விஷயம் என்பது அனுபவ உண்மை. லண்டன் யுனிவர்ஸிடி காலேஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
இதனை ஒரு ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். 

மனித மூளையில் ஹிப்போகேம்பஸ் எனப்படும் செல்கள் உள்ளன. ஒரு வரைபடத்தை புரிந்து கொள்ளும் திறனை மனிதனுக்கு தருகிற இந்த செல்களே மேற் சொன்ன ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

உயரமான கம்பம் ஒன்றில் ஒரு எலியை ஏற வைத்து, அது எவ்வளவு உயரத்தில் நிற்கிறது என்பதை கூறும்படி ஆராய்ச்சியில் பங்கு பெற்றவ்ர்களிடம் கேட்கப்பட்டது. 

அவர்களால் அந்த உயரத்தை உத்தேசமாகக்கூட கணிக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. விண்வெளியில் தட்டையான பகுதிகளை சரியாக கணிக்க முடிகிற மனித மூளையினால் முப்பரிமாணம் கொண்ட உயரத்தை சரிவர திட்டமிடமுடியவில்லை என்பது தான் இவர்களது முடிவு.



[Read More...]


சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்











 சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது.
இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.

அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம். 

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets