நைஜீரியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1ஆர் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் சீனாவின் ஜிசாங் விண்வெளி தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டது.
இது இன்னும் 15 ஆண்டுகள் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என "சீனா டெய்லி" எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் நைஜீரியாவின் பாதிப்படைந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1க்குப் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 4 சர்வதேச தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்தி சீனா சாதனை புரிந்துள்ளது.
இது வரை வர்த்தக ரீதியில் சுமார் 33 சர்வதேச செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
Responses
0 Respones to "எனது 100 ஆவது பதிவு --- நைஜீரியாவின் செயற்கைக்கோள் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது"
Post a Comment