Pages

பறவை டிசைனில் பிரமாண்ட விமானம் !







பால்டிமோர் : இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விமான தலைமை டிசைனர் வில்லியம் பிளாக் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த காட்விட் பறவை (‘கண்ணாடி உள்ளான்’ என்ற வகை) இரை, நீர் இல்லாமல் பல கி.மீ. தூரம் பறக்க கூடியது. ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு சுமார் 11,677 கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக பறந்து சாதனை படைத்தது இந்த பறவை. இதை முன்உதாரணமாக வைத்துதான் ஸ்டிரேட்டோலைனர் விமானத்தை டிசைன் செய்தேன். அதாவது, இன்ஜின் சூடு தணிக்க, எரிபொருள் நிரப்ப என்று எந்த காரணத்துக்காகவும் தரையிறங்க கூடாது. நான்ஸ்டாப்பாக வெகு நேரம் பறக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் கீழ் பகுதியைவிட மேல் பகுதியில் காற்று இடைஞ்சல் குறைவாக இருக்கும். ஆனால், அவ்வளவு உயரத்தில் விமானங்கள் பறக்க முடியாது. எனவே, அதிக உயரத்தில் பறப்பதற்கு ஏற்ப காட்விட் பறவை போலவே பெரிய இறக்கைகள், பின்பக்க வால் பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தை அதிக உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக 4 கிரையோஜெனிக் ஹைட்ரஜன் டர்போஃபேன் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர் விமானங்கள் போல இது குறைந்த எரிபொருளில்கூட இயங்க முடியும். சிறிதுகூட புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படும். விமான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு வில்லியம் பிளாக் கூறினார்.
[Read More...]


நவம்பர் 09 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை



1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

1921 - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நொபெல் பரிசைப் பெற்றார்.

1953 - கம்போடியா, பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது.

1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்திலிருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை அனுப்பியது.

1989 - கம்யூனிசக் கிழக்கு ஜெர்மனி, பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்லத் தொடங்கினர்.

1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 ல் இந்திய முன்னாள் அரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்

2006 ல் தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஆகியோர் இறந்தனர்
[Read More...]


நவம்பர் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





1680 - இத்தாலியரான தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தார்.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


1965 – பிரித்தானிய அரசில் மரணதண்டனை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது.

[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets