Pages

வருங்காலத் தொழில்நுட்பம் 01










           இரண்டு வாரங்களுக்கு முன் சான்ஃபிரான்சிஸ்கோ டெக் கான்ஃபரன்ஸ் ஒன்றில் பேசிய கூகுள் சி.இ.ஓ எரிக் ஸ்மித், 'கார்களின் பிரச்னை, அவை கம்ப்யூட்டர்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதுதான். 


இல்லை என்றால், கார்கள் இப்போது தங்களைத் தாமாகவே ஓட்டிக்கொண்டு இருக்கும்!' என்று வேறு ஏதோ கேள்விக்குப் பதில் அளிக்கையில், எக்ஸ்ட்ரா ஒரு பிட் விட, டெக் உலக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் முகங்களில் பளீர் பல்ப். அவர்கள் சுறுசுறுப்பாக அதைப்பற்றிய செய்திகளைத் தேடத் துவங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரகசியமாக கூகுள், தானோட்டு கார் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.


 அதைப்பற்றிய விவரங்களைப் பார்க்கும் முன், கூகுளின் 'Street View' புராஜெக்ட்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் கட்டப்பட்டு இருக்கும் கூகுளின் மேப்ஸ் தளம் (http://maps.google.com) பிரபலமானது. புதிய இடம் ஒன்றுக்குச் செல்கையில் திசைகள் தெரிந்துகொள்ள மேப்ஸ் தளம் பயன்படும். 



அந்தத் தளத்தின் பயனீட்டை அதிகரிக்க, கூகுள் சென்ற ஆண்டில் Street View என்பதை அறிமுகப்படுத்தியது. செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும் பறவைப் பார்வையுடன், தெருவில் நடக்கும்போது பார்க்கும் பார்வையையும் இணைத்தால் என்ன என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் Street Viewன் அடிப்படை. உதாரணமாக, பாளையங்கோட்டை NGO காலனியில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடைபெறும் நண்பனின் திருமண வரவேற்புக்கு, நெல்லை டவுனில் இருந்து வர வேண்டி இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். கூகுள் மேப்பில், எங்கிருந்து புறப்பட்டு, எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கொடுத்தால், திருப்பம் பை திருப்பமாக அது வழி சொல்லிக்கொடுக்கும்.

இதனுடன், செல்லும் வழியில் உள்ள பாதையையே தொடர்புகைப்படமாகக் காட்டினால், மிக வசதியாக இருக்கும். 'அப்டியே வந்து, பிள்ளையார் கோயில் முக்குல திரும்பி, ஒரு ரெண்டு நிமிஷம் ஓட்டினா, அண்ணா சிலை வரும். அதுல லெஃப்ட்ல திரும்பினா...' என்றெல்லாம் நண்பனின் குளறுபடி திசை காட்டல் தேவைப்படாது. எங்கே போகப்போகிறீர்கள்; அதன் பாதையில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு விஷ§வலாக, புறப்படுவதற்கு முன்பே தெரிந்திருக்கும். 'நல்லா இருக்கே' என்று தோன்றலாம். ஆனால், இதைக் காரியத்தில் கொண்டுவர, கூகுள் பட்ட/படும் பாடு பெரிது. தெருக் காட்சிகளைப் படம் எடுக்க கேமரா பொருத்தப்பட்ட கார்களை அனுப்பிவைக்க வேண்டும். இந்த கார்கள் சீரான வேகத்தில் செல் லும்போது, தெருக் காட்சிகள் படம் எடுக்கப்பட்டு, சரியாக இணைக்கப்பட வேண்டும். இப்படிப் படம் எடுத்ததில் சில்லறைத்தனமாகவும், சீரியஸாகவும் கூகுள் எதிர்பார்க்காத சில பிரச்னைகள்.

உதாரணத்துக்கு, கோடைக் காலம் என்பதால், நீச்சல் குளத்தின் அருகே டாப்லெஸ்ஸாக சூரியக் குளியல் எடுத்தபடி இருந்த சீமாட்டியின் படம் வேலிகளுக்கு இடையே தெரிவதை பக்கத்து வீட்டு மாமி சொல்லித் தெரிந்துகொண்ட சீமாட்டி அப்செட். சாலை விபத்தில் இறந்தவரின் பிணம் நகர்த்தப்படாமல் அப்படியேகிடக்கும் க்ளோசப் கோரக் காட்சி என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் சமர்ப் பிக்கப்பட்டால், அவற்றை கூகுள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால், அதற்கான பணியாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அவசியம் வேறு.

அதைவிட முக்கியமானது, இந்த கேமரா கார்கள் தெருவில் உலா வருகையில், தெருப் புகைப்படங்களை எடுப்பதற்கும் மேலாக என்னென்ன மற்ற தகவல்களைச் சேகரிக்கலாம் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, வீடுகளில் இருக்கும் வயர்லெஸ் இணைப்புகளின் விவரங்களையும் சேகரித்தது தெரிய வர... பல நாடுகளின் அரசாங்கங்களுக்குக் கோபம். ஜெர்மனிபோன்ற சில நாடுகள்... கூகுள், கேமரா கார்களைப் பயன்படுத்துவதையே தடை செய்துவிட, 'தெரியாம செஞ்சுட் டேண்ணா... இனி இப்படி பண்ணவே மாட் டேங்ணா!' என்று சர்வதேச மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை. ஆனாலும், எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் தொடர்ந்து தெருப் பார்வை புகைப்படம் எடுக்கும் கார் களை ஓடவிட்டு, தகவல் திரட்டபடியேதான் இருக்கிறது கூகுள்.

Street View அறிமுகம் போதும். இப்போது ஆளே இல்லாமல் கார் ஓட்டும் தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம்.

சென்ற ஒரு வருடமாக, ஓட்டுநர் இயக்க வேண்டிய அவசியம் இல்லாமல், GPS மற்றும் சென்சார்களின் உதவியுடன் பல டொயோட்டா கார்களை சான்ஃபிரான்சிஸ்கோவில் இயக்கி வருவதை கூகுள் ஆமோதித்து இருக்கிறது. பரிசோதனை முயற்சியாக, கிட்டத்தட்ட 1,50,000 மைல்கள் இப்படி ஓட்டப்பட்டு இருக்கும் கார்களில், ஓட்டுநர் ஒருவர் இருப்பார். தானியக்கத்தில் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டால், ஸ்டீயரிங் வீலை லேசாகப் பிடித்தால் போதும். காரின் தானியக்கம் நின்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் கார் வந்துவிடும். இது வரையிலான இந்தப் பரிசோதனையில், விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இரண்டு முறை மட்டுமே ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டுக்கு காரை கொண்டுவர வேண்டிய அவசியம் இருந்தது என்பது கொசுறு செய்திகள்.

'இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித சமூகத்துக்கு மிகப் பாதுகாப்பான வாகன ஓட்டுதலை அளிக்க கூகுள் முயற்சி செய்வது பாராட்டத்தக்கது!






                                           http://www.vikatan.com/article.php?aid=1945&sid=59&mid=10
[Read More...]


அப்துல் கலாம்





அப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்

" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது. "
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

வாழ்க்கை

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம்

எழுதியுள்ள நூல்கள்
  • அக்னிச் சிறகுகள்
  • எழுச்சித் தீபங்கள்
  • இந்தியா 2020
  • இந்தியா 2010
  • அப்புரம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

விருதுகள்

பத்மா பூஷன் (1981)
பத்மா விபூஷன் (1990)
பாரத் ரத்னா (1997).

அப்துல் கலாமின் இணையத்தளம்
http://www.abdulkalam.com/kalam



முன்னாள் குடியரசுத் தலைவர் இந்தியா 



 

தன்னம்பிக்கை வரிகள்
1
முடியாது என்ற நோய்
" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. 

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும் "

2
மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங் களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டுபிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்
3
உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படை களில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.
4
சிந்தனை செய்.


இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!



“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”
5 
 ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.   வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”


6
கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.


7
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”


8
இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”





9
மாணவப் பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.


10
வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.​ நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.​ பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்


நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்
நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,​​
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”



எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்.



                               
                                                                                     By    http://ejaffna.blogspot.com/2011/06/blog-post.html
                                                    
[Read More...]


Blu-ray Disc





Blu-ray என்பதை Blu-ray Disc (BD) எனவும் அழைப்பர்கள்.

இது ஒரு பிரபல்யம் அடைந்து வரும் Optical குறுந்தட்டு (Disc) வகையைச் சேர்ந்தது.

இதை Blu-ray Disc Association (BDA) என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது Apple, Dell, Hitachi, HP, JVC, LG, Mitsubishi, Panasonic, Pioneer, Philips, Samsung, Sharp, Sony, TDK போன்ற நிறுவனங்களும் Blu-ray Disc ஜத் தயாரித்து வெளியிடுகின்றன.

இந்த Blu-ray Disc இல் உயர் தர வீடியோக்களை (high-definition video) write, rewrite பண்ண முடிகின்றது.

Blu-ray Disc ஆனது சாதாரண DVD களை விட 5 மடங்கு சேமிப்பு (capacity) செய்ய முடியும். அதானுங்க.. 25GB ஜ விட கூடிய அளவு capacity கொண்டது. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் ஒரு லேயர் (Single-layer disc) என்றால் 25GBஉம் இரண்டு லேயர் (Dual-layer disc) என்றால் 50GB உம் capacity கொண்டது. இருந்தும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் Pioneer நிறுவனமானது 20 layer களைப் பயன்படுத்தி 500GB capacity கொண்ட Blu-ray Disc ஜ அறிமுகப்படுத்தியுள்ளது.





இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய தகவல்: சாதாரண DVD, அதாவது DVD, DVD±R, DVD±RW, DVD-RAM களில் Red Laser குறுந்தட்டை வாசிக்க(read), write பண்ணப் பயன்படுகின்றது. ஆனால் Blu-ray Disc களில் வாசிக்க(read), write பண்ண Blue-Violet Laser உபயோகிக்கப்படுகின்றது.





                                           Red Laser & Blue-Violet Laser

தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால், Blue-Violet Laser ஆனது Red Laser இன் அலைநீளத்தை (wave length) விட சிறியது. இதனால் Blu-ray Disc இல் write பண்ணும் போது மிக நெருக்கமாகவும், லேசர் focus (Laser Focus Spot) அதிகமாகவும் இருக்கும். எனவே தரம் அதிகரிகின்றது.




                                              by http://techbyvarma.blogspot.com/2009/12/blu-ray-disc-bd.html
[Read More...]


Sehwag, swashbuckling record breaker



I


Sehwag, swashbuckling record breaker









INDIA, Indore : Indian batsman Virender Sehwag celebrates after scoring a double century (200 runs) during the fourth one-day international cricket match between India and West Indies at The Holkar Stadium in Indore on December 8, 2011.
[Read More...]


Tips






1.ATM card வச்சு இருக்கீங்களா?? 

24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)
For ATM related Services:
> ATM Card/PIN delivery status
> Lost Card/Card Blocking/Hotlisting
> Details of other value added services available – of State Bank ATMs
> State Bank ATM locations/addresses
> Guidance for Card usage at ATMs and Point of Sales.

2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ??

Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு??

Go...

இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ??



5. உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா?? 

உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.To know your IP address??

www.knowmyip.com
www.whatismyip.com
www.ipaddresslocation.com


7. Toll Free Numbers for computer Problems solving??

TOLL FREE NUMBERS For any PC problems
AMD-18OO4256664
Dell-18OO444O26
HCL-18OO18O8O8O
IBM-18OO443333
Microsoft-18OO1111OO

8. keyboard shortcut keys எல்லாம் தெரிந்து கொள்ள எங்கே?? 

Computer keyboard shortcut keys
It has List of all Computer
shortcut keys 4 applications.

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி??


youtube  வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.

10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி?? 

Run--> msconfig

Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.




[Read More...]


Contact me





[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets