Pages

எனது 100 ஆவது பதிவு --- நைஜீரியாவின் செயற்கைக்கோள் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது



                  






  
நைஜீரியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1ஆர் சீனாவின் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.


 இந்த செயற்கைக்கோள் சீனாவின் ஜிசாங் விண்வெளி தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை ஏவப்பட்டது.

 இது இன்னும் 15 ஆண்டுகள் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என "சீனா டெய்லி" எனும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
 


இந்த செயற்கைக்கோள் நைஜீரியாவின் பாதிப்படைந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1க்குப் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது.

 இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 4 சர்வதேச தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்தி சீனா சாதனை புரிந்துள்ளது.

 இது வரை வர்த்தக ரீதியில் சுமார் 33 சர்வதேச செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
[Read More...]


ஃபுகுஷிமா அணு மின் உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியில் எடுக்க 40 வருடங்கள் தேவை !!!





ப்பான் நாட்டின் ஃபுகுஷிமா நகரில், ஆழிப் பேரலையால் அழிவடைந்த அணு மின் நிலையத்தில், உலையில் சிக்கியுள்ள எரிபொருளை வெளியே பக்குவமாக எடுக்க 40 ஆண்டுகளும் சுமார் 78,400 கோடி ரூபாவும் தேவைப்படும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
 
அப்படி வெளியே எடுக்கும் கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அடுத்த சவால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலையிலிருந்து, எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் செல்லும். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
 

 ஃபுகுஷிமா அணு உலையால் கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது என்றும் தெரியவருகிறது.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன.


இத் தகவல்களை இந்த அணு உலைக்காகவே ஜப்பானிய அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ, டோக்கியோ நகரில் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.


அணு மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் மலிவானது, அணு உலைக்கு எந்தவித ஆபத்தும் நேராது, அப்படியே கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்துவிடலாம், தடுத்து விடலாம் என்று கூறப்படும் வேளையில் ஃபுகுஷிமா அணு உலை தொடர்பாக வெளிவரும் இந்தத் தகவல்கள் அச்சம் தருபவை
யாக இருக்கின்றன.

[Read More...]


துணைக்கோள் இல்லாவிட்டாலும் கிரகங்களுக்கு பாதிப்பில்லை




        அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பூமி அதன் அச்சில் உள்ள நிலைப்பாடு குறித்து இதாஹோ பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு துணைக்கோள் இல்லாத நிலையிலும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதில்லை என தெரிய வந்துள்ளது.

 





மேலும் மற்ற கோள்களுக்கும் துணைக்கோள் என்பது அவசியமில்லை என்றும் அதனால் கோள்களின் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது என்றும் அது தெரிவிக்கின்றது.
 
இதுவரையில், துணைக்கோள் இல்லையெனில் பூமி தன் அச்சிலிருந்து சிறிது விலக நேரிடும் என்றும், அதனால் சூரிய ஒளி துருவ பகுதிகளில் விழுந்து பருவகால நிலைகளில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் எனவே உயிரினங்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்றும் அறிவியலாளர்கள் நம்பி வந்துள்ளனர்.
 
தற்போது, இந்த ஆராய்ச்சி முடிவால் பூமி அதனுடைய துணைக்கோள் இன்றியும் தன் அச்சில் சீராக இயங்கும் என தெரிய வந்துள்ளது.












     
[Read More...]


சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்











 சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது.
இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.

அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம். 

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.
[Read More...]


உயிரை கொடுத்து நாயை காப்பாற்றியவர்



              
                    














                                    ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாயுடன் கிழக்கு தன்பார்டன்ஷயரில் உள்ள ஏரி அருகே சென்றார்.


                                 அப்போது, நாய் தண்ணீரில் சென்றது. அதை காப்பாற்ற அவர் முயற்சிக்கையில் தவறி பாதி உறைந்த ஏரிக்குள் மூழ்கினார்.


                               ஆனால், நாயை பத்திரமாக மீட்டு வெளியேற்றி விட்டார். இதையடுத்து, அவரை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
        
                               இறுதியாக லென்சி நகரின் கட்லக் என்ற இடத்தில் தெளிந்த நீர்ப்பகுதியில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 
                     
                                இது ஒரு விபத்தாகவே இருக்கும் என்று நம்புகிறோம் என போலிசார் தெரிவித்தனர். இருப்பினும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[Read More...]


குகை மனிதன் கட்டிய எலும்பு வீடு கண்டுபிடிப்பு!




                                  




ற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. 


சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.


அவை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குகை மனிதர்களால் கட்டப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. 

அந்த வீடு 26 அடி அகலத்தில் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[Read More...]


ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்!



                                                    
                                  செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.

                                                                                                                   
  
                     200 கிலோ   எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதியிலிருந்து 19-ந் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
[Read More...]


ரூ.450 கோடி சம்பாதித்த பாப் பாடகி லேடிககா




ந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பாப் பாடகர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.



இதன் மூலம் முன்னிலையில் இருந்த பாப்பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். டெய்லர் சுவிப்ட் ரூ. 225 கோடி (45 மில்லியன் டாலர்) சம்பாதித்து 2-வது இடத்தையும், பெர்ரி ரூ. 220 கோடி (44 மில்லியன் டாலர்) சம்பாதித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பியான்ஸ் நோலஸ், ரிகானா ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். லேடி ககாவின் “மான் ஸ்டர்ஸ்யில்”, “மிர்” ஆகிய வீடியோ ஆல்பம் அவருக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.


                                                                                  



                                                                                        By-   www.maalaimalar.com
[Read More...]


'தெய்வீகத் துகள்' கண்டுபிடிப்பு






ணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
 இவற்றை தெய்வீகத் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

எனினும், இது குறித்த இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்
.
நுண்துகள்களை சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பெரும் வேகத்துடன் முடுக்கிவிட்டு
அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
[Read More...]


சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க சட்டத் திருத்தம்




     பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.


கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது, இனி அனைத்து துறைகளிலும் சிறந்து 
விளங்குபவர்களுக்கு வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதன்மூலம், சச்சின், ஹாக்கி வீரர் தயானந்த் சந்து உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்படலாம் என விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்
[Read More...]


ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தாகூர் சிலை




உலக செய்திகள் 


 புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்தரநாத் தாகூரின் சிலை ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.

சிட்னியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்குயர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தாகூர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் இந்திய சார்பில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் அமித் தாஸ் குப்தா கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் மைக்கேல் ஏகன், துணைவேந்தர் ஸ்டீவென் ஷ்வார்ட்ஸ், மற்றும் சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தின் தலைவர் விஸ்வஜித் குப்தா தாகூர் சிலைக்கு அருகில் புதிய பூங்கா ஒன்றை நிறுவ குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவின் கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு "ஏக்தால்' எனப்படும் கல்வித்திட்டம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஆராய்ச்சி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்புகளில் விரிவுரையாளர்கள் மற்றும் உதவித்தொகை போன்ற செயல்களில் கூட்டுமனப்பான்மையுடன் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தாகூரின் புத்தகம் ஏலம்... தாகூரின் புத்தகம் ஒன்று சுமார் ரூ.8,500,000 க்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. தாகூர் எழுதிய பாடல்கள், கவிதை மற்றும் முக்கியமான வரைவுகள் அடங்கிய புத்தகம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்தப் புத்தகம் சுமார் ரூ.13 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது



                                                                                                                                                                    by http://dinamani.கம













[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets