உலக செய்திகள்
சிட்னியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்குயர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தாகூர் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் இந்திய சார்பில் ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் அமித் தாஸ் குப்தா கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் மைக்கேல் ஏகன், துணைவேந்தர் ஸ்டீவென் ஷ்வார்ட்ஸ், மற்றும் சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிட்னியில் உள்ள மேற்குவங்க சங்கத்தின் தலைவர் விஸ்வஜித் குப்தா தாகூர் சிலைக்கு அருகில் புதிய பூங்கா ஒன்றை நிறுவ குறிப்பிட்ட தொகையை சங்கத்தின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவின் கலாசாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு "ஏக்தால்' எனப்படும் கல்வித்திட்டம் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஆராய்ச்சி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்புகளில் விரிவுரையாளர்கள் மற்றும் உதவித்தொகை போன்ற செயல்களில் கூட்டுமனப்பான்மையுடன் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தாகூரின் புத்தகம் ஏலம்... தாகூரின் புத்தகம் ஒன்று சுமார் ரூ.8,500,000 க்கு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டது. தாகூர் எழுதிய பாடல்கள், கவிதை மற்றும் முக்கியமான வரைவுகள் அடங்கிய புத்தகம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. இந்தப் புத்தகம் சுமார் ரூ.13 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது
Labels:
உலக செய்திகள்




Previous Article

Responses
0 Respones to "ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் தாகூர் சிலை"
Post a Comment