டைனேசர்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பது பற்றி இடையிடையே பெறப்படும் நிரூபணங்கள் மூலமே கிடைக்கின்றன. அண்மையில் சீன விஞ்ஞானக் கல்லூரியினரால் ஒரு சம்பவம் பதியப்பட்டுள்ளது. இதிலிருந்து சில டைனசர்கள் பறவைகளை உட்கொண்டுள்ளன என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இதன்போது சிறிய பறவையொன்றின் எச்சம் ஒரு Microraptor என்ற பறவைபோன்ற டைனேசர் வகையின் வயிற்றுக்குள் சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவையினத்தை அவை உண்டுவந்துள்ளன என்பதைப் பற்றிக் கூறிவந்தாலும் இதுவரை சரியான ஆதாரம் இல்லாமலிருந்தது. 65-145 மில்லியன் ஆண்டுகளிற்கு இடைப்பட்ட எச்சத்தின் வயிற்றுப் பகுதியில் அது உண்ட பறவையின் எச்சமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களிலுள்ளவற்றை உண்பதாயின் அவையும் பறவைகளைப் போலவே மரங்களில் வாழ்ந்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Browse » Home » Archives for 11/26/11
Subscribe to:
Posts (Atom)