Pages

வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு !



வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் வியாழன் கிரகத்தில் பனிக்கட்டி படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பதில் சந்தேகம் எற்பட்டது. இந்நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. “யூரோப்பா”வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets