தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் லெனின் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக உபதலை மின்வாரிய உதவி என்ஜினியர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
புவி வெப்பம் அடைதல் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. புவி வெப்பம் அடைதல், உலக நாடுகளில் வறட்சி, பருவம் தவறி மழை பெய்தல் போன்றவை அதிகரித்து வருகின்றன. கடந்த நூற்றாண்டின் தொழிற்புரட்சி காரணமாக ஏராளமான நிலக்கரிகள் எரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு கடந்த நூற்றாண்டில் மட்டும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
ஆனால் 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையில் மட்டும் கூடுதலாக 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு உள்ளது. தற்போது உள்ள நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டு களில் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவு 2 ஆயிரம் கோடி டன்னாக உயரும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பூமியின் வெப்பம் 2 முதல் 4 டிகிரி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் பயன்படுத் தப்படும் மின்னாற்றலில் 70 சதவீதம் அனல் மின் நிலையங் களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் போது 4 கிலோ வரையிலான கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. மின்னாற்றலைல சிக்கன மாக செலவழித்தால் பூமி வெப்பமடைவதை தடுக்கலாம்.
நாம் சேமிக்கும் ஒவ் வொரு யூனிட் மின்சாரமும், 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமமாக உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அஜிப் வரவேற் றார். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.
http://www.maalaimalar.com
Responses
0 Respones to "கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்"
Post a Comment