Christy,Lawrenson என்ற இந்த தம்பதிகள் யார் இந்தக் காசை எடுத்திருப்பார்கள் என்று பல கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினர்.
ஆனால் அவர்கள் திருடனை விரைவில் கண்டு பிடித்து விட்டார்கள். வீட்டுக்கு வெளியே இருந்து யாரும் வந்து திருடவில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான Tuity நாய் தான் காசு காணாமல் போனதற்கு காரணம்.
நடந்த சம்பவம் இது தான், குறித்த தம்பதியினர் மாதாந்த சம்பளத்தில் 1000 டொலரை சேமிக்கும் வழக்கம் உள்ளவர்கள்.
வங்கியில் வைப்பிலிடுவதற்காக 1000 டொலரை தனியே எடுத்து ஒரு தபால் உறையால் கவரிட்டு வைத்திருந்தனர்.
அவர்கள் மதிய உணவு அருந்தி விட்டு வங்கியில் போடுவதற்காக பணத்தை தேடிய போது அதை எங்கேயும் காணவில்லை.
பின்னர் அறையொன்றின் ஒரு பகுதியில் 100 டொலர் தாள் கிழிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்துள்ளது.
அதன் பின்னர் நாயை மிருக நல வைத்தியரிடம் கொண்டு சென்று வாந்தி எடுக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீதி 900 டொலர்களும் மீட்கப்பட்டன.
டொலர் காணாமல் போனமை ஒருபக்கம் இருக்க தங்களது செல்ல நாய் தான் விழுங்கியது என்ற வியப்பு இன்னும் தங்களை விட்டு நீங்கவில்லை என்கின்றனர் தம்பதியர்.
Responses
0 Respones to "அசால்டாக விழுங்கிய நாய்! தம்பதிகள் அதிர்ச்சி"
Post a Comment