JULY 07, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் அல்டிரின் ஆகியோர் சந்திரனில் அமெரிக்காவின் தேசிய கொடியை நட்டி பறக்க விட்டனர்.
அதை தொடர்ந்து ஆய்வுக்காக 6 முறை சென்ற அமெரிக்க விஞ்ஞானிகள் தங்கள் நாட்டு கொடியை அங்கு நாட்டினர்.
இந்நிலையில் அந்த கொடிகள் இன்னும் அங்கு பறந்து கொண்டிருக்கின்றனவா? என்பதை அறிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சாந்தா பார்பரா லிப்ராதியின் ஆன்னி என்பவர், ஆய்வு மேற்கொண்டார்.
அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனில் நாட்டிய 4 கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. 2 கொடிகள் மட்டும் காணவில்லை. அவை சந்திரனில் வெளியாகும் வாயுக்களால் சிதைந்து கிழிந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
Responses
0 Respones to "40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி!"
Post a Comment