தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து மற்றும் நோய் இயல்துறை பேராசிரியர் எட்வர்டு ஜியோவன்னுசி தலைமையிலான குழுவினர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். Ôநர்சஸ் ஹெல்த் ஸ்டடிÕ என்ற தொடர் ஆய்வில் 67,470 பெண்களிடம் நீண்ட கால ஆய்வு நடந்தது. காபி குடிக்கும் பழக்கத்துக்கும் கேன்சர் செல்கள் உருவாவதற்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.
தினமும் 4 கப்புக்கும் அதிகமாக காபி குடித்தவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதமும், 2 முதல் 3 கப் வரை குடித்தவர்களுக்கு 7 சதவீதமும் குறைந்திருந்தது. காபின் என்ற பொருள் நீக்கப்பட்ட காபியை தினமும் 2 கப் குடித்தவர்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் குறைந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
ÔÔபுற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காபி முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், காபியில் இன்சுலின் இருப்பதால் டயபடீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதுÕÕ என ஜியோவன்னுசி தெரிவித்துள்ளார்.
Tweet

Responses
0 Respones to "தினசரி 4 கப் காபி... கேன்சரை தடுக்குமாம்"
Post a Comment