Pages

பூமிக்கு அருகில் வந்து சென்றது அபூர்வ கிரகம்



வாஷிங்டன் : விண்வெளியில் இருந்து கீழிறங்கிய கிரகம் ஒன்று, 8ம் தேதி இரவு பூமியை நெருங்கி வந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது. 2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 3.24 லட்சம் கி.மீ. வரை நெருங்கி வந்தது. 8ம் தேதி இரவு வேகமாக இது நடந்தது. 
சந்திரனில் இருந்து பூமிக்கு இடையே உள்ள தூரத்தில் 0.85 பங்கு அளவுக்கு கிரகம் அருகே வந்தது. 

விண் பாறாங்கல் வடிவிலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவதால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும் என கருதப்பட்டது. அதற்காக தொலைநோக்கி கருவிகளுடன் நாசா விஞ்ஞானிகள் காத்திருந்தனர். 1,300 அடி அகலம் கொண்டது இந்த ஒய்.யூ.55 கிரகம். சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது, கருமையானது என நாசா தெரிவித்திருந்தது. எனினும், பூமிக்கு மிக அருகில் வந்ததை காண முடியாமல் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

இதுபற்றி நாசா செய்தி தொடர்பாளர் வெரோனிகா மெக்கிரகர் கூறுகையில், ‘‘மனிதன் பார்க்கக்கூடிய குறைந்தபட்ச வெளிச்சத்தைவிட 100 மடங்கு குறைவான இருளில் இருந்ததால் கிரகத்தை காண முடியவில்லை’’ என்றார். கார்பன் அடிப்படையிலான சி&டைப் கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களை அறிய இந்த கிரகம் பூமிக்கு அருகில் வருவது வாய்ப்பாக அமையும் என்று நாசாவின் கலிபோர்னிய மைய அதிகாரி டான் யோமன்ஸ் தெரிவித்தார். 

இதுபோன்ற கார்பன் அடிப்படையிலான பாறை வடிவ கிரகங்கள் உயிர் வாழத் தேவையான காரணிகளை பூமிக்கு அளிக்கின்றன. அதன் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நாம் இங்கிருந்திருக்க முடியாது என்று டான் யோமன்ஸ் கூறினார்.

                            
                                                                                                 
                                                                                                                                                           Thanks Dinakaran News Paper
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "பூமிக்கு அருகில் வந்து சென்றது அபூர்வ கிரகம்"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets