Pages

The US space agency (Nasa) has released the sharpest ever elevation map of the Moon.





             It will enable scientists to accurately portray the shape of the entire Moon at a higher resolution than ever before.
The map was produced using data sent back by the Lunar Reconnaissance Orbiter (LRO) spacecraft, which was launched in June 2009.
It reveals troughs and bumps over nearly the entire Moon with a pixel scale close to 100m (328 ft).

A single measure of elevation (one pixel) on the map is roughly the size of two football pitches placed side-by-side.
"Our new topographic view of the Moon provides the dataset that lunar scientists have waited for since the Apollo era," said Dr Mark Robinson, chief scientist on the Lunar Reconnaissance Orbiter Camera (LROC), one of LRO's instruments.
Dr Robinson, from Arizona State University in Tempe, added: "We can now determine slopes of all major geologic terrains on the Moon at 100m scale, determine how the crust has deformed, better understand impact crater mechanics, investigate the nature of volcanic features, and better plan future robotic and human missions to the Moon."
Two instruments were involved in producing the map: the camera instrument (specifically the Wide Angle Camera) and the Lunar Orbiter Laser Altimeter (Lola) instrument.
The Nasa spacecraft was launched to lunar orbit carrying six instruments designed to collect detailed information about the lunar environment.
[Read More...]


சர் ஐசக் நியூட்டன்




மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது?
மரத்திலிருக்கும் பழம் ஏன் பூமியை நோக்கிக் கீழே விழுகிறது? அந்தப் பழம் மரத்திலிருந்து அதற்கும் மேலே ஏன் செல்லவில்லை?
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இறுதியில் பூமியை நோக்கி வருகின்றனவே ஏன்? இது போன்ற நிகழ்ச்சிகள் எதனால் நடக்கின்றன? என்று கூட எவரும் நினைத்தும் பார்த்ததில்லை.
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது.
இங்கிலாந்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் சர் ஐசக் நியூட்டன் பிறந்தார். இந்த ஊர் அவர் பிறந்ததனாலேயே வரலாற்றில் இடம் பெற்றது.
அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள் என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும்.
உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு 1642. மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை.
ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும் இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது.
கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்ற போது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார்.
பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது.
தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியை நியூட்டன் கற்றார்.
பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை.
ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். அதுவும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. கிடைத்த வேலையிலும் விருப்பத்தோடு பணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா?
ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே அந்தப் பணி. அதிலும் நான்காண்டுகள் ஈடுபட்டார் படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். கணிதத்தில் பட்டம் பெற்றார்.
விடுமுறைக்கு தமது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக் காடசிதான் அவரை சிந்திக்க செய்தது. மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது, என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது….
எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை கண்டுபிடித்து பூமிக்கு ‘புவி ஈர்ப்பு சக்தி உண்டு’ என்பதை நியூட்டன் கண்டறிந்தார்.
பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான்.
தமது இருபத்து ஆறாம் வயதில் தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்த நியூட்டன், இந்தப் பணியில் முப்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார்.
சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.
இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’ என்று குறிப்பிடப்படுகிறது..
நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம்.
‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான்.
நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். நாணயச் சாலை பாதுகாப்பாளராகவும் அவர் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை.
பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தமது 85 ஆம் வயதில் நியூட்டன் இறந்தார்.
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நியூட்டன் கல்லறை இருக்கிறது. இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.
[Read More...]


காரல் மார்க்ஸ் தத்துவமேதை





ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் – ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.
இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர்.
திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார்.
பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு.
தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எந்த திசை வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறார் என்பதை இந்தக் கட்டுரை அடித்தளமிட்டது.
பதினேழு வயதுச் சிறுவர்களுக்குரிய சிந்தனையிலிருந்து மார்க்ஸின் சிந்தனை முற்றிலும் மாறியிருந்தது.
உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப் பிறகு மார்க்ஸ் போன் நகரத்திலும், பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். அவர் சட்டவியலைத் தேர்ந்தெடுத்தாலும், தத்துவ ஞானத்தையும், வரலாற்றையும் மிகவும் விரும்பிப் பயின்றார்.
1814-ஏப்ரலில் இயெனா பல்கலைக் கழகத்தில் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து, தத்துஞானத்தில் டாக்டர் பட்டம பெற்றார்.
பத்திரிக்கைத் துறையை அறிந்து கொள்ள விரும்பிய மார்க்ஸ், ‘ரைன்’ பத்திகையில் 1842-ஏப்ரலில் வேலைக்குச் சேர்ந்தார். அதே வருடம் அக்டோபர் மாதம் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார்.
ஜெர்மனியின் அரசியல் நிலையையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மார்க்ஸ் அறிந்து கொள்ள பத்திரிக்கைப் பணி உதவியது.
சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளையும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளையும் பிரிட்டன், பிரான்சிலிருந்து வெளிவந்த சோஷலிஸ்டு நூல்கள் மார்க்ஸின் சிந்தனைக்கு உரமூட்டின.
பிரஷ்ய அரசாங்கம் ‘ரைன்’ பத்திரிக்கையைத் தடை செய்ய முயன்றது. அதனால் 1843- மார்ச் 17 – ல் அந்தப் பத்திரிக்கையிலிருந்து காரல் மார்க்ஸ் விலகினார்.
காரல் மார்க்ஸ் ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். அத்தகைய கவிதைகளில் ஒன்று;
“என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன்
‘எங்கே செல்கிறாய்? என்க்கொரு உலகம் தேடி!
இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே கடல்களும் மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்.
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்
நான் நெடுந்தூரம் ஊர்ந்து சென்றேன்
திரும்பினேன் கீழும் மேலும் உலகங்கள்
விண்மீன்களும் கதரவனும் துள்ளின
மின்னல் வெட்டியது நான் மடிந்தேன்”
‘தேடல்’ என்ற தலைப்பில் காரல்மார்க்ஸ் எழுதிய இந்தக் கவிதையை ஜென்னிக்குக் காணிக்கையாக்கினார்.
தன்னுடன் பயின்றவரும், தன்னைவிட மூன்று வயது மூத்தவரும், தன்னைவிட வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த வருமான ஜென்னியை மார்க்ஸ் மணந்து கொண்டார். மாணவப் பருவத்திலேயே ஒருவரை ஒருவர் விரும்பி, எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்திருந்தனர்.
காரல் மார்க்ஸ் தம்பதிக்கு ஜென்னி, எலியனோரா, லௌரா, பிரான்சிஆகா என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.
அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராகத் திகழ்ந்த காரல் மார்க்ஸ், தமது ஓய்வு நேரத்தை தமது குழந்தைகளுடன் விளையாடுவதிலும், கொஞ்சி மகிழ்வதிலும் செலவிட்டார். அவர்களோடு விளையாடும்போது காரல் மார்க்ஸூம் குழந்தையாக மாறிவிடுவார்.
ஒருவர் வினாத் தொடுக்க, மற்றவர் அதற்குப் பதில் சொல்லும் ‘வினா – விடை’ என்ற விளையாட்டு காரல் மார்க்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த விளையாட்டை குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த போது மார்க்ஸூம் அதில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் காரல் மார்க்ஸிடம் கேட்ட வினாக்களும் அதற்கு அவர் சொன்ன விடைகளும்…
“உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”
-எளிமை
“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”
-உறுதியான நோக்கம்
“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
-போராடுவது
“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”
-அடங்கி நடத்தல்
“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”
- அடிமை புத்தி
“உங்களுக்கு விருப்பமான தொழில்?”
-புத்தகம் படித்தல்
“உங்களுக்கு விருப்பமான நிறம்?”
-சிவப்பு.
குழந்தைகள் காரல் மார்க்ஸை நேர்கண்டபோது அவர் சொல்லிய கருத்துக்கள் ஒரு புரட்சிக்காரரின் வாக்குமூலமாக அமைந்துவிட்டது.
1843 அக்டோபரில் மார்க்ஸ் பாரிசுக்குச் சென்றார். இங்குதான் மார்க்ஸின் சிந்தனைகளுக்குச் சரியான வாய்ப்புக் கிடைத்தது.
புறநகர்ப் பகுதிகளில் வாழக்கூடிய தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், தத்துவவியலாளர்கள் ஆகியோரைச் சந்திப்பதிலும், அவர்களோடு விவாதிப்பதிலும் மார்க்ஸ் நேரத்தைச் செலவிட்டார்.
1844 பிப்ரவரியில் ‘ஜெர்மன் – பிரெஞ்சு ஆண்டு மலர்’ என்ற பத்திரிகையில் ‘யூதப் பிரச்சினையைப் பற்றி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி மார்க்ஸின் பார்வை இந்தக கட்டுரையில் வெளியிடப்பட்டது.
இடது சாரி ஹெகல்வாதியான புரூனோ பௌவரையின் கருத்துக்களுக்கு மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் பதில் கொடுத்திருந்தார்.
1842-ல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்துக்குச் சென்றபோது மார்க்ஸைச் சந்தித்தார்
1844 ஆகஸ்டில் மீண்டும் எங்கெல்ஸ் – மார்க்ஸ் சந்திப்பு நடைபெற்றது. இருவரின் சிந்தனையும் ஒன்றுபட்டு இருந்ததால் கூட்டாகவும், தனியாகவும் சிந்தித்து பல்வேறு படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிரஸ் அரசாங்கத்தின் நிர்பந்தத்தால், பிரான்சிலிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அதனால் 1845-ல் மார்க்ஸ் பிரஸ்ஸெல்சில் குடியேறினார்.
1847-ல் ஜூலை லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப்பின் இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில்தான் உலகத் தொழிலாளர்களுக்காக “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற புதிய கோஷத்தை மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் வழங்கினர்.
1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.
1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.
1848- பிப்ரவரியில் பிரான்சில் புரட்சி வெடித்தது. அதை கண்டு அஞ்சிய பெல்ஜிய அரசாங்கம் மார்க்ஸைக் கைது செய்து நாடு கடத்தியது.
பாரிஸ், லண்டன், ஜெர்மன், பிரஸ்ஸெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளரகள் அமைப்புகளை வழி நடத்துவதிலும், கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்துவதிலும் மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் அயராது பாடுபட்டனர்.
தொழிலாளர்களின் அமைப்பு ரீதியான செயல்களில் ஈடுபடுவது; அந்ததந்த தேசத்தின் தொழிலாளர் நிலைகளையும் ஆளுவோரின் செயல்களையும் சேகரித்து, தொகுத்து தொழிலாளர்களின் பங்களிப்பு பற்றி எழுதுவது; தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிப்பது; அவற்றிற்குத் தலைமை ஏற்பது என்று பல்வேறு வடிவங்களில் மார்க்ஸூம் தொடர்ந்து செயல்பட்டனர்.
தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற நூலாகக் கருதப்படும் ‘மூலதனம்’ என்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் 1867- செப்டம்பரில் வெளியிட்டார். இந்தப் பணிகளில் ஏங்கெல்ஸ் மார்க்ஸூக்கு பேருதவி புரிந்தார்.
இந்த நூலை மார்க்ஸ் எழுதி கொண்டிருந்த போது அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது. ஒருவேளை ரொட்டித் துண்டுக்கும் கூட அந்தக் குடும்பம் அல்லல் பட வேண்டியது ஏற்பட்டது. மார்க்ஸின் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது சவப்பெட்டி வாங்கக்கூடக் காசில்லாமல் மார்க்ஸின் குடும்பம் அவதிப்பட்டது.
மார்க்ஸின் மனைவி ஜென்னிக்கு மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிக்கு மருந்து கூட வாங்கக் காசில்லாமல் தவித்தனர். மார்க்ஸ் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ஏங்கெல்ஸின் உதவிதான் அவர்களுக்கு கை கொடுத்தது;
‘மூலதனம்’ மூன்று பாகங்கள் கொண்டதாகும். இந்த நூல்கள் இன்றும் சமுதாய மாற்றத்திற்குப் போராடும் வீரர்களின் கையேடாகவும், போர் வாளாகவும் திகழ்கிறது.
உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864-ல் செப்டம்பர் 28-ல் லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டிலதான் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கம். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார்.
1883-மார்ச் 14 -ம் தேதி காலையில் மார்க்ஸ் படுக்கையைவிட்டு எழுந்தார். படிப்பறைக்குள் நுழைந்தார்…. சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்… உட்கார்நபடியே மார்க்ஸ் மரணத்தை தழுவினார்.
மார்க்ஸின் மரணம் பற்றி, “நம் கட்சியின் மிகப்பெரும் அறிஞர் தம் சிந்தனையை நிறுத்திவிட்டார். நான்றிந்த அளவில் மிகவும் பலமான இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது” என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்   

                                         


                                                  http://www.tamildesam.org/special-pages/great-personalities/karl-marx/
                                                                
[Read More...]


சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள்



சூரிய குடும்பத்தில் வேற்று கிரகவாசிகள் அலைந்து திரிவதாகவும், அவர்களை நெருங்கி பார்க்க முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்தி
ய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதாக நம்புகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இருவர் ஒபாமா நிர்வாகத்தின் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர். எங்களது ஆழமான விண்வெளி ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் பயோனீர் மற்றும் வொயா ஜெர் விண்வெளி ஓடங்களை கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்தால் இது புலப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த கருத்தை “ஆக்டா” என்ற விண்வெளிக்கான அமைப்பு ஏற்றுக் கொண்டு அதன் இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது.
ராக் எத்திக்ஸ் இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹக் மிஸ்ரா, புவி மற்றும் சுற்றுச்சூழல் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் ஆகியோரும், வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். வேற்றுக்கிரக வாசிகளின் விண்வெளி ஓடம் நமது சூரிய குடும்பத்தை சுற்றி வருவதை காண முடிகிறது.
ஆனால் அதன் புறப்பகுதியை நெருங்கிச் சென்று பார்க்க முடியவில்லை. இன்னும் ஆழமாகச் சென்று நுணுக்கமான முறையில் ஆராய்ச்சி செய்தால் வேற்றுக்கிரக வாசிகளை நெருங்கிச் சென்று பார்க்க முடியும் என்று அவர்கள் உறுதிப்பட கூறி உள்ளனர்.
[Read More...]


தகவல்: 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதலை இனங்கள்



ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன.
இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஆய்வு நடத்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் கூறியதாவது: 9.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ‘டைனோசர் காலம்’ என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள்.
அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல முதலை வகையை சேர்ந்த ஷீல்டு குரோக் விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின் மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது.
அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ஷீல்டு குரோக்கோடைல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும்.
ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது.
[Read More...]


தகவல்




1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது
http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.


3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.


4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.



5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.


6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

11) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


[Read More...]


பூமிக்கு அருகே வந்து விட்டுப் போன விண்கல்-காண முடியாமல் நாசா ஏமாற்றம்





பூமிக்கு அருகே, அதாவது 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் அருகே வந்து விட்டுப் போன பெரிய சைஸ் விண்கலத்தைக் காண காத்திருந்த நாசா விஞ்ஞானிகள் மகா இருளாக அந்த விண்கல் இருந்ததால் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.


 

அந்த விண் கல்லுக்கு 2005 ஒய்யூ 55 என்று பெயர். இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமையன்று இரவு பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா வி்ஞ்ஞானிகள் பட்டாளம் தயாராக காத்திருந்தது. ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளால் கூட பார்க்க முடியாத அளவுக்கு விண்கல் இருளாக இருந்ததால் பூமிக்கு அருகே வந்து போனதை பார்க்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த விண்கல்லானது செவ்வாய்க்கிழமை இரவு, பூமியிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்கள் அதாவது தோராயமாக மூன்றே கால் லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கி வந்தது. பூமிக்கு அருகே விண்கல் வந்ததால் அது குறித்து நிறைய தகவல்களை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.
விண்கல் பூமியை நோக்கி வந்த சமயத்தில், நிலவின் வட்டப் பாதையில் அது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.
இதற்கு முன்பு பூமியை நோக்கி ஒரு விண்கல் வெகு அருகே நெருங்கி வந்தது 1976ம் ஆண்டு நடந்தது. அடுத்து 2028ம் ஆண்டு இதேபோல நடக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பூமிக்கு பக்கத்தில் வந்து போன விண்கல்லானது ஒரு ஹெலிகாப்டர் சைசிலானது. கிட்டத்தட்ட 400 மீட்டர் அகலத்தைக் கொண்டது. அட்டக் கரி நிறத்தைக் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட வடிவில் நகராமல் அது இஷ்டத்திற்கு வேறு வேறு திசையில் நகர்கிறது. மிகவும் மெதுவாக நகரக் கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒருமுறைதான் இது நகருகிறது.
இதுகுறித்து நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் சேர்ந்த லேன்ஸ் பென்னர் கூறுகையில், இதுவரையில் பூமிக்கு வெகு அருகே நெருங்கி வந்த ஒரு விண்கல் எது என்றால் அது இதுதான். இவ்வளவு அருகே இதுவரை எதுவும் நெருங்கி வந்ததில்லை என்றார்.
இந்த விண்கல் பூமிக்கு அருகே வந்ததால் அது குறித்த மேலும் பல விரிவான தகவல்களை ஆராய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோன் ஆய்வகத்திலும், பியூர்டரிகோவில் உள்ள அரெக்கிபோ ஆய்வகத்திலும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் விண்கல் பெரும் இருட்டாக இருந்ததால் அதை காண முடியாமல் போய் விட்டது. இந்த இரு ஆய்வகங்களிலும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகள் உள்ளன. ஒலிகளை அனுப்பி அதன் மூலம் இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய திட்டமிடப்பட்டிருந்தது.
அதன் உண்மையான வடிவம், விண்கல் எதனால் ஆனது உள்ளிட்டவற்றை ஆராய காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த விண்கல் குறித்து நாசாவைச் சேர்ந்த டான் யோமன்ஸ் என்பவர் கூறுகையில், 2005 ஒய்யூ 55 விண்கல் மிகவும் வித்தியாசமானது. இது விண்கல்லாக இருந்தாலும் கூட இது ஒரு வகையான கிரகமும் கூட. இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கார்பனும் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே மனிதர்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது இந்த விண்கல் என்றார்.
இந்த விண் கல் பூமியில் விழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இது பூமியின் நிலப்பரப்பில் விழுந்தால் 4000 மெகாடன் அளவிலான பெரும் பிரளயம் ஏற்படும். மேலும், 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நான்கு மைல் நீளத்திற்கும், 1700 அடி ஆழத்திலும் பெரும் பள்ளம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர்.
ஒரு வேளை கடலில் விழுந்தால், விழும் இடத்தில் 70 அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து 2029ம் ஆண்டில் அபோசிஸ் என்ற இன்னொரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி வரப் போகிறதாம். இதுவும் கூட ஒய்யூ 55 போன்ற விண்கல்தான். இதனாலும் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள். இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு அருகே வந்து செல்லுமாம்.
பூமியிலிருந்து 29,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நெருங்கி வரும் என்பதால் விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்து 2036ம் ஆண்டிலும் இதே விண்கல் பூமிக்கு அருகே வருமாம்.
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets