Pages

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காண





ணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் இணையதளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மற்றும் மாவட்டங்களுக்கும் தனித்தனி இணையதளங்களை உருவாக்கி தங்கள் தகவல்களை இணையத்தில் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத்தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியாவில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங்களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு தளத்தை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது.


Districts என்ற தளத்தில் இந்திய மாவட்டங்களின் இணையதளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 


இதில் இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இருக்கும் இதில் உங்களுக்கு விரும்பிய மாநிலத்தை கிளிக் செய்தால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் வரும். 


அந்த பட்டியலில் நீங்கள் ஏதேனும் தெரிந்து கொள்ளவேண்டிய மாவட்டத்தின் லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களை அந்த மாவட்டத்தின் தளத்திற்கு அழைத்து செல்லும். அதில் நீங்கள் அந்த மாவட்டத்தின் அரசாங்க அறிவுப்புகளை பார்த்து கொள்ளலாம். மட்டும் அரசு படிவங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். உங்கள் குறைகளையும் அந்த மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் தெரிவிக்கலாம்.


தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களில் அரியலூர் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திற்கும் தனி இணையதளம் உள்ளது.


10 ஆம் வகுப்பிற்குள் படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் அவர்களுக்கு அறிய தாருங்கள். 












                                                                                         thanks http://www.vandhemadharam.com
[Read More...]


ஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் Appointment பெறும் வசதி



ந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் UID(Unique Identification card) எனப்படும் அடையாள அட்டையை இந்திய அரசு வழங்கி கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை UIDAI(Unique Identification Authority of India) என்ற அமைப்பின் மூலம் இந்திய அரசு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த அடையாள அட்டையை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் மட்டும் தான் இந்த அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 பேர் தான் ஒரு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.


 மற்றவர்கள் திரும்பி செல்ல வேண்டியது தான். முதலில் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் அதிகாலையிலேயே சென்று இதற்க்காக லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு UIDAI அமைப்பு ஆன்லைனில் Appointment வாங்கும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்லைனில் Appointment வாங்கிவிட்டால் சரியான நேரத்திற்கு சென்று சுலபமாக ஆதர் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். இதற்க்காக மணிக்கணக்கில் லைனில் காத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.


Appointment ஆன்லைனில் பதிவு செய்ய :
இதற்காக ஒரு http://appointments.uidai.gov.in/ இணையப்பகுதியை உருவாக்கி உள்ளது. 

தற்பொழுது சோதனை ஓட்டமாக இந்த வசதி குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு(Delhi, Chandigarh, Maharashtra, Haryana, Himachal Pradesh, Punjab)  மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலத்திற்கும் இந்த வசதி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அந்த லிங்கில் சென்று அதில் கேட்கப்படும் முழுவிவரங்களை கொடுத்த பின்னர் Fix Appointment என்பதை அழுத்தினால் உங்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


உங்களுக்கு இது போன்று விண்டோ வரும் இதில் நீங்கள் எப்பொழுது யாரை பார்க்க வேண்டும் என்ற அனைத்து தகவல்களும் இருக்கும். இதை ஒரு Print எடுத்துக்கொண்டு அதனோடு உங்களின் ID Proof மற்றும் Address proof போன்றவைகளை எடுத்து கொண்டு குறிப்பிட்ட அதிகாரியை பார்த்து உங்கள் அடையாள அட்டையை பதிவு செய்து விடலாம். 

அடையாள சான்றிதழ்கள் என்னென்ன கொண்டு செல்லலாம்:
Id Proof மற்றும் Address Proof க்கு எவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சிலருக்கு குழப்பம் உண்டாகலாம். அவர்கள் கீழே உள்ள பதத்தில் உள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு செல்லலாம். 


ஆன்லைனில் Enrolment Form டவுன்லோட் செய்ய:
தபால் அலுவலகத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்வது தாமதமாகும் என்பர் எண்ணினால் இந்த லிங்கில் சென்று Enrolment Form டவுன்லோட் செய்து வீட்டில் இருந்தே பூர்த்தி செய்து கொண்டு சென்றால் வேலை மேலும் சுலபமாகிவிடும். 

வாங்கிய Appointment Cancel (or) நேரத்தை மாற்றி அமைக்க:
ஒருவேளை நீங்கள் Appointment வாங்கிய நேரத்தில் போக முடியவில்லை என்றால் தயவு செய்து உங்கள் Appointment Cancel செய்து விடுங்கள் அல்லது நேரத்தை மாற்றி கொள்ளுங்கள். அதற்க்கு இந்த லிங்கில் http://appointments.uidai.gov.in/frmReScheduleEnrolment.aspx கிளிக் செய்து செல்லுங்கள். 

இதில் உங்களின் மொபைல் எண்ணையும், Token ID கொடுத்து தேவையான பட்டனை அழுத்தி பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் சந்தேகங்களுக்கு:
உங்களுக்கு இந்த Aadhar அடையாள அட்டையை பற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் Toll free: 1800-180-1947 மற்றும் Email: appointments@uidai.gov.in இவைகளை தொடர்பு கொண்டு கேட்கலாம். 

முடிந்தவரை அனைத்து தகவல்களும் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் கருத்துரையில் கேட்கவும்.



                                                                                                                                         நன்றி -www.vandhemadharam.com
                                                                       
[Read More...]


பறவைகளை உண்ணும் டைனேசர்கள்



பறவைகளை உண்ணும் டைனேசர்கள் : ஆய்வில் நிரூபணம்!டைனேசர்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பது பற்றி இடையிடையே பெறப்படும் நிரூபணங்கள் மூலமே கிடைக்கின்றன. அண்மையில் சீன விஞ்ஞானக் கல்லூரியினரால் ஒரு சம்பவம் பதியப்பட்டுள்ளது. இதிலிருந்து சில டைனசர்கள் பறவைகளை  உட்கொண்டுள்ளன என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இதன்போது சிறிய பறவையொன்றின் எச்சம் ஒரு  Microraptor  என்ற பறவைபோன்ற டைனேசர் வகையின் வயிற்றுக்குள் சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவையினத்தை அவை உண்டுவந்துள்ளன என்பதைப் பற்றிக் கூறிவந்தாலும் இதுவரை சரியான ஆதாரம் இல்லாமலிருந்தது. 65-145 மில்லியன் ஆண்டுகளிற்கு இடைப்பட்ட எச்சத்தின் வயிற்றுப் பகுதியில் அது உண்ட பறவையின் எச்சமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மரங்களிலுள்ளவற்றை உண்பதாயின் அவையும் பறவைகளைப் போலவே மரங்களில் வாழ்ந்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
[Read More...]


கால்களுக்கு ஓய்வு இல்லையெனில் மூளை பாதிக்கும் : ஆய்வு



கால்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கவில்லை எனில் மூளையில் பாதிப்பு ஏற்படும் என ஆசியாவில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியாவின் நரம்பு அறிவியல் ஆராய்சி மையம் மேற்கொண்ட சோதனையில், கால்களுக்கும், பாதத்திற்கும் சரியான முறையில் ஓய்வு கொடுக்காவிட்டால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இருபது நபர்களில் ஒருவர் இந்த பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மூளையின் செயல் திறன் பாதிப்பதால், அன்றாட வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பதும் நினைவாற்றல் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இரவில் தூக்கம் கூட தடைபடும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

[Read More...]


தினசரி 4 கப் காபி... கேன்சரை தடுக்குமாம்



 தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து மற்றும் நோய் இயல்துறை பேராசிரியர் எட்வர்டு ஜியோவன்னுசி தலைமையிலான குழுவினர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். Ôநர்சஸ் ஹெல்த் ஸ்டடிÕ என்ற தொடர் ஆய்வில் 67,470 பெண்களிடம் நீண்ட கால ஆய்வு நடந்தது. காபி குடிக்கும் பழக்கத்துக்கும் கேன்சர் செல்கள் உருவாவதற்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த குழுவினர் ஆராய்ந்தனர்.

தினமும் 4 கப்புக்கும் அதிகமாக காபி குடித்தவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதமும், 2 முதல் 3 கப் வரை குடித்தவர்களுக்கு 7 சதவீதமும் குறைந்திருந்தது. காபின் என்ற பொருள் நீக்கப்பட்ட காபியை தினமும் 2 கப் குடித்தவர்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் குறைந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது. 

ÔÔபுற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காபி முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், காபியில் இன்சுலின் இருப்பதால் டயபடீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதுÕÕ என ஜியோவன்னுசி தெரிவித்துள்ளார்.
[Read More...]


Electric Super bus (எலக்ட்ரிக் சூப்பர் பஸ்).



The Dutch-built Super bus 


                                       டச்-கட்டப்பட்ட சூப்பர் பஸ்  ஒரு சில நாட்கள் முன்பு அபு தாபியில்"மாஸ்டர் சிட்டி "ஊடகங்களின் காட்டப்பட்டது. முழுமையாக மின்சார மற்றும் 23 பயணிகளை ஏற்றிசெல்லும். இது 250 kph திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது துபாய், அபுதாபி குறைஅடுத்த தலைமுறை தீர்வாக விழுவதற்கு வருகிறது.


                                   உண்மையான கருத்து ஒலி  எனினும், வெளிப்படையாக துபாய் மற்றும் அபுதாபி இடையே  இரண்டாவது நெடுஞ்சாலையில் நெரிசல் குறைக்க.  இன்னும் சோதனை நடக்கிறது, முன்மாதிரி இதுவரை நிர்வகிக்கப்படும் சிறந்த வேக 140 kph, மற்றும் வடிவமைப்பு நடைமுறையில் கூட மாற்றங்கள் அதிகமாக உள்ளது.


  People command:
            I guess every passenger either on left side or right side has to hold the mirror to help the driver                
                                                                     
                                                                           

[Read More...]


வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு !



வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் வியாழன் கிரகத்தில் பனிக்கட்டி படிவங்கள் இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பதில் சந்தேகம் எற்பட்டது. இந்நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள “யூரோப்பா” என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. “யூரோப்பா”வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான பனிக்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets