Pages

ஏழரைச் சனி என்ன செய்யும்?




                            

                                              காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. 
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். 
முதல் சுற்று: 
பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.  

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும். 

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும். 

இரண்டாவது சுற்று:
இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள். 

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?  
வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். 
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  
இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி
பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.
 
மூன்றாவது சுற்று: 
கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.
[Read More...]


‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’














                                ‘தினசரி ஒரு ஆப்பிள்; டாக்டர் வேண்டாம்’ என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழைப்பழத்தின் மகத்துவம் காலம் காலமாக தெரிந்ததுதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் மனித ஆரோக்கியத்தில் அதன் பங்கு பற்றி டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் சிலர் ஆய்வு நடத்தினர். அவர்கள் கூறியதாவது:

வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல. ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் (ஆர்எஸ்) தடுக்கிறது. அதன் கார்போ ஹைட்ரேட் காரணமாக அளவோடு உணவு சாப்பிட்டு ஸ்லிம்மாக இருக்க முடியும்.
ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

ஆப்பிளுடன் ஒப்பிட்டால், ஒரு வாழைப்பழத்துக்கு 4 ஆப்பிள்கள்தான் சமம். ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். இவ்வாறு ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்
[Read More...]


குகை மனிதன் கட்டிய எலும்பு வீடு கண்டுபிடிப்பு!




                                  




தற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. 


சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.


அவை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குகை மனிதர்களால் கட்டப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. 

அந்த வீடு 26 அடி அகலத்தில் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[Read More...]


நாளை மறுதினம் சனிப்பெயர்ச்சி விழா 2 லட்சம் பக்தர்கள் தரிசிக்கலாம்






                       புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோயிலில்   நாளை மறுதினம் காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மும்முரமாக செய்துவருகிறது. இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறியதாவது:


சனிப்பெயர்ச்சியன்று கோயில் மற்றும் நளன் குளத்திற்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்லவும், சனிபகவானை தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக தர்ம தரிசனம், ரூ.100, ரூ.300 மற்றும் வி.ஐ.பி தரிசனம் என 4 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், சுமார் 2 லட்சம் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்கும் விடுதிகள், உணவு, வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். அன்று ஜனகல்யாண் அமைப்பு சார்பில் இலவச அன்னதானத்திற்கும் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.  


















[Read More...]


பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு.




   நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.
கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.
எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள் ‘வசிக்கத்தக்க வலயம்’  (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால் ‘வசிக்கத்தக்க வலயத்திற்குள்’ கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும். 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.
[Read More...]


இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது : விக்ரம் சரபாய்



இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது என, விக்ரம்  சரபாய் விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் ஜான்  சச்சரயாஹ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


 விண்வெளி ஆய்வுத் திட்டங்களை, வெளிநாட்டு உதவி இல்லாமலேயே நிறைவேற்றும் அளவுக்கு, இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் திறன் படைத்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில், இந்தியா, கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்று விட்டதாக, சச்சரயாஹ் குறிப்பிட்டார். 



வெளிநாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் செயற்கைக் கோள் திட்டங்கள் பெரும்பாலானவை.

இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



விண்வெளித் துறையில் ஆய்வாளராக ஆற்றிய பங்களிப்பிற்காக, கோயம்புத்தூரில், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்ச்சியின் ஏற்புரையில், ஜான்  சச்சரயாஹ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
[Read More...]


ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்!



                                                    
                                  செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.

                                                                                                                   
  
                     200 கிலோ   எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதியிலிருந்து 19-ந் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets