Pages

வருங்காலத் தொழில்நுட்பம் 02



ன்னொரு வருடம் விருட்டெனக் கடந்துவிட்டது. பல்லாயிரம் பில்லியன்களில் இ-மெயில்களும், குறுஞ்செய்திகளும், வலைப்பதிவுகளும், காணொளிகளுமாக இணையம் சென்ற ஆண்டு இறுதியைவிடச் சற்றே பெருத்திருக்கிறது. 26 வயதான ஃபேஸ்புக் நிறுவனர் Time பத்திரிகையின் Man of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். வல்லரசுகளின் ராஜ ரகசியங்கள் இணையம் மூலம் கடைவிரிக்கப்பட்டது. இணையம் விரிந்து வருவதன் வேகமும், வீச்சும் அதிகமாகியிருப்பது வாக்குவாதம் செய்யத் தேவை இல்லாத உண்மை. 2011-லும் இது தொடரும்.

இந்த டெக் பயணத்தைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்!

தொலைபேசி சாதனத் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்து,இன்றைய 
நாளில் கிட்டத்தட்ட ஒரு கணினிக்கு நிகரான வசதியுடன் அலைபேசிகள் வந்துவிட்டாலும், ஒன்று மட்டும் அடிப்படையில் மாறவே இல்லை. அது தொலைபேசி எண்!

ஒரு நபரைத் தொலைபேசியில் அழைக்க, உங்களுக்குத் தேவை அவரது தொலைபேசி எண். அந்த எண் தொலைந்துபோனாலோ, அல்லது மாறிவிட்டாலோ, உங்களது தரப்பில் அந்த எண்ணை மாற்றிக்கொண்டாக வேண்டும். இணையத்தின் முக்கிய சேவைக்கூறாக இன்றைக்கு இருக்கும் Skype, Google Voice போன்ற இணையம் சார்ந்த பேச்சு சேவைக்கூறான Voice Over UP (VoIP) தொழில்நுட்பங்கள் வளர்ந்த பின்னரும், தொலைபேசி எண் என்பதன் முக்கியத் துவத்தைக் குறைக்க முடியவில்லை. eBay நிறுவனத்துக்குச் சொந்தமான Skype, தனது தொழில்நுட்பத்தைப் பாரம்பரியத் தொலைபேசித் தொழில்நுட்பத்துடன் இணைக்க எடுத்த முயற்சி பயனீட்டாளர்களுக்குத் தொலைபேசி எண்களை வழங்குவதில் முடிந்தது. Skype-க்கு அடுத்து, பிரபலமாக இருக்கும் கூகுள் வாய்ஸ் (voice.google.com) பயன்படுத்தப் பதிவு செய்ய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தொலைபேசி எண்ணைத் தேர்வு செய்வது.

அண்டன் என்ற என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களை எண்களின் மூலம்தான் தொடர்புகொள்ள வேண்டுமா? ஒவ்வொருவரும் பல தொலைபேசிகளை வைத்துக்கொள்ளும் வசதி பெருகிவிட்ட இந்த நாட்களில், எத்தனை எண்களைத் தான் சேமித்துவைக்க வேண்டி வரும்? எனது தொலைபேசி எண் மாறிவிட்டால், அதை எப்படி அனைவருக்கும் தெரிவிக்க முடியும்? பல நாடுகளுக்குப்  பயணிக்கும்போது, அங்கு தற்காலிகமான எண்களைப் பயன்படுத்தும்போது, அதை அனைவருக்கும் தெரிவிக்கவில்லையே என்றெல்லாம் பல கேள்விகள் அவ்வப்போது என் மனதில் எழுவது உண்டு.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கும் வலிமை இருக்கும் ஒரே நிறுவனம், ஃபேஸ்புக். எப்படி?

இ-மெயிலுக்கு நிகரான தகவல் தொடர்பு சேவையாக வளர்ந்து நிற்கும் ஃபேஸ்புக்கை, இன்றைய தேதியில் 550 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். சராசரி ஃபேஸ்புக் பயனீட்டாளர் தன்னைப்பற்றிய தகவல் பகுதியில் தன்னுடைய தொலைபேசி எண்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறார். அவரை அழைத்துப் பேச வேண்டும். ஆனால், அவரது தொலைபேசி எண் தெரியாவிட்டால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து எண்ணைக் கண்டுபிடித்துக் கூப்பிடலாம், அல்லவா? ஒருவேளை, அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டால், சொந்த பந்தம், நண்பர்களை அழைத்து சொல்ல வேண்டியது இல்லை. ஃபேஸ்புக்கில் புதிய எண்ணை மாற்றிவிட்டால் போதும்.

இன்னும் ஒருபடி முன்னால் செல்லலாம். ஆப்பிள் மற்றும் கூகுள் போல, ஃபேஸ்புக்கும் தொலைபேசிச் சாதனம் ஒன்றை வெளியிட்டால்? என்னிடம் பேச, அண்டன் பிரகாஷ் என்ற எண்ணைத் தேடிக் கூப்பிட வேண்டாம். ஃபேஸ்புக் போனைத் திறந்து 'அண்டனைக் கூப்பிடு!’ என்றால், அது என்னுடைய தற்போதைய தொலைபேசியில் அழைக்கும். என்னிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இருந்தால், அவற்றை எந்த வரிசையில் அழைக்க வேண்டும் என்பதை நான் ஃபேஸ்புக்கில் கொடுத்துவிட்டால், அந்த வரிசைப்படி அழைத்து என்னைத் தொடர்புகொள்ளவைக்கும். தேவையான பயனீட்டாளர்கள் கிடைத்த பின், தொலைபேசி எண் என்பதன் தேவையையே ஃபேஸ்புக்கால் இல்லாமல் செய்துவிட முடியும். வெளிப்படையாக ஆமோதிக்காவிட்டாலும், இந்தக் கோணத்தில் ஃபேஸ்புக்குக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது. தங்களது தொலைபேசித் தொழில்நுட்பம் திருப்திகரமாகச் செயல்படும் வரை தங்களது ஆர்வத்தை ரகசியமாக வைத்திருக்க ஃபேஸ்புக் முயற்சிக்கும். காரணம், அதுவரை ஆப்பிளின் ஐ-போன்/ஐ-பேட் பயனீட்டாளர்களும், கூகுளின் ஆண்ட்ராயிட் பயனீட் டாளர்களும் தமது அலைபேசிகளில் இருந்து ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி, அதைச் சார்ந்து இருக்க வைக்க வேண்டும் என்பது ஃபேஸ்புக்கின் விருப்பம்.

2015 வாக்கில், தனி நபர்களின் தொலைபேசி எண் என்பதே மறைந்துவிடும் என்பது எனது அனுமானம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "வருங்காலத் தொழில்நுட்பம் 02"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets