எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.
ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்;
குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்.
-ஏ.வான்பர்ன்
மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.
பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.
இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.
உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
Responses
0 Respones to "பொன்மொழிகள் 05"
Post a Comment