நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்
ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
கடனை நாமம் சாத்தினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
-முள்முடியில் தி.ஜானகிராமன்
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.
நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.
போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.
பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற
சிலந்திப் பூச்சி.
விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.
Responses
0 Respones to "பொன்மொழிகள் 04"
Post a Comment