Pages

நாளை மறுதினம் சனிப்பெயர்ச்சி விழா 2 லட்சம் பக்தர்கள் தரிசிக்கலாம்






                       புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோயிலில்   நாளை மறுதினம் காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மும்முரமாக செய்துவருகிறது. இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறியதாவது:


சனிப்பெயர்ச்சியன்று கோயில் மற்றும் நளன் குளத்திற்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்லவும், சனிபகவானை தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக தர்ம தரிசனம், ரூ.100, ரூ.300 மற்றும் வி.ஐ.பி தரிசனம் என 4 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், சுமார் 2 லட்சம் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்கும் விடுதிகள், உணவு, வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். அன்று ஜனகல்யாண் அமைப்பு சார்பில் இலவச அன்னதானத்திற்கும் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.  


















[Read More...]


பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு.




   நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.
கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.
எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள்வசிக்கத்தக்க வலயம்’  (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால்வசிக்கத்தக்க வலயத்திற்குள்கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும். 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.
[Read More...]


இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது : விக்ரம் சரபாய்



ந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரம் வாய்ந்தது என, விக்ரம்  சரபாய் விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் ஜான்  சச்சரயாஹ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


 விண்வெளி ஆய்வுத் திட்டங்களை, வெளிநாட்டு உதவி இல்லாமலேயே நிறைவேற்றும் அளவுக்கு, இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் திறன் படைத்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில், இந்தியா, கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்று விட்டதாக, சச்சரயாஹ் குறிப்பிட்டார். 



வெளிநாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் செயற்கைக் கோள் திட்டங்கள் பெரும்பாலானவை.

இரு நாடுகளும் பலன் பெறும் வகையில் நிறைவேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



விண்வெளித் துறையில் ஆய்வாளராக ஆற்றிய பங்களிப்பிற்காக, கோயம்புத்தூரில், தமக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்ச்சியின் ஏற்புரையில், ஜான்  சச்சரயாஹ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
[Read More...]


ரஷ்ய விண்கலம் பூமியில் மோதும் அபாயம்!



                                                    
                                  செவ்வாய் கிரகத்தின் துணைக்கிரகமான சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது.

                                                                                                                   
  
                     200 கிலோ   எடையுள்ள இந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதால், பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அந்த விண்கலமானது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவ்வாறு சிதைவடையும் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.





இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதியிலிருந்து 19-ந் தேதிக்குள் நடைபெறும் என ரஷ்யாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள் மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
[Read More...]


உங்கள் மெபைலில் தமிழ் திரைப்படங்களை தரவிறக்கம் செய்ய 15 தளங்கள்!




புத்தம் புதிய திரைப்படங்களை தரவிறக்கம் செய்யவேண்டுமாயின் இணைய இணைப்புடன் கணணி தேவை.
 ஆனால் நாம் வைத்திருக்கும் மொபைலிலே புதிய திரைப்படங்களை பதிவிறக்கி பார்த்து கொள்ளலாம் .

 இதற்காக 15 தளங்கள் முக்கியமான தளங்களாக கருதப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி உங்கள் மெபையில் புத்தம் புதிய திரைப்படங்களை நீங்களும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்..வாழ்த்துக்கள்!
                           
 அதற்கான தளங்கள் :

1.Mobile Movies

2.3Gp Mobile Movies

3.Tamil Mobile Movies

4.Mobile Movies 

5.Free TAMIL FULL MOVIES DOWNLOAD

6.Mobile Movies – Free Download Latest Bollywood, Hollywood,

7.CrazyMovies.In | Mobile Movies Free Downloads

8.Mobile Movies Online

9.Movie Arena – Free Download Latest Bollywood, Hollywood, 

10.AviMobileMovies.Com | Free Download Latest Bollywood, Hollywood

11.MOVIES-MOBILE.IN- 3GP BOLLYWOOD MOBILE MOVIE DOWNLOADS

12.Full Movies

13.3GP – 3GP Videos Mobile Videos Download Music Videos MV3gp.com

14.moviez.mobie.in

15.MoviesWood.Com offers Malayalam Mobile Movies,Malayalam 3gp Movies 


[Read More...]


கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்




            மிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சேமிப்பு குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மேல்நிலை பள்ளியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
 
கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றம்இந்த கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் லெனின் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக உபதலை மின்வாரிய உதவி என்ஜினியர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
 
புவி வெப்பம் அடைதல் குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. புவி வெப்பம் அடைதல், உலக நாடுகளில் வறட்சி, பருவம் தவறி மழை பெய்தல் போன்றவை அதிகரித்து வருகின்றன. கடந்த நூற்றாண்டின் தொழிற்புரட்சி காரணமாக ஏராளமான நிலக்கரிகள் எரிக்கப்பட்டு உள்ளது. இதனால் 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு கடந்த நூற்றாண்டில் மட்டும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
 
ஆனால் 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையில் மட்டும் கூடுதலாக 500 கோடி டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு உள்ளது. தற்போது உள்ள நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டு களில் காற்றில் கார்பன்-டை ஆக்சைடின் அளவு 2 ஆயிரம் கோடி டன்னாக உயரும் வாய்ப்பு உள்ளது.
 
இதனால் பூமியின் வெப்பம் 2 முதல் 4 டிகிரி வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் பயன்படுத் தப்படும் மின்னாற்றலில் 70 சதவீதம் அனல் மின் நிலையங் களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தும் போது 4 கிலோ வரையிலான கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. மின்னாற்றலைல சிக்கன மாக செலவழித்தால் பூமி வெப்பமடைவதை தடுக்கலாம்.
 
நாம் சேமிக்கும் ஒவ் வொரு யூனிட் மின்சாரமும், 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு சமமாக உள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அஜிப் வரவேற் றார். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.










                                                      http://www.maalaimalar.com
[Read More...]


ரூ.450 கோடி சம்பாதித்த பாப் பாடகி லேடிககா




ந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பாப் பாடகர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது.

அதில், அமெரிக்க பாப் பாடகி லேடிககா முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் இவர் ரூ. 450 கோடி (90 மில்லியன் டாலர்) சம்பாதித்துள்ளார்.



இதன் மூலம் முன்னிலையில் இருந்த பாப்பாடகர்கள் டெய்லர் சுவிப்ட், காட்டி பெர்ரி ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். டெய்லர் சுவிப்ட் ரூ. 225 கோடி (45 மில்லியன் டாலர்) சம்பாதித்து 2-வது இடத்தையும், பெர்ரி ரூ. 220 கோடி (44 மில்லியன் டாலர்) சம்பாதித்து 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக பியான்ஸ் நோலஸ், ரிகானா ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். லேடி ககாவின் “மான் ஸ்டர்ஸ்யில்”, “மிர்” ஆகிய வீடியோ ஆல்பம் அவருக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.


                                                                                  



                                                                                        By-   www.maalaimalar.com
[Read More...]


 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets